Home /News /tamil-nadu /

குடியரசு தின அணிவகுப்பில் தமிழக ஊர்தி அனுமதிக்கப்பட வேண்டும்: பொன்.ராதாகிருஷ்ணன்

குடியரசு தின அணிவகுப்பில் தமிழக ஊர்தி அனுமதிக்கப்பட வேண்டும்: பொன்.ராதாகிருஷ்ணன்

பொன் ராதாகிருஷ்ணன்

பொன் ராதாகிருஷ்ணன்

பொன் ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் பேசுகையில், குடியரசு தின அணி வகுப்பில் தமிழர் ஊர்தி  செல்வது தமிழர்களுக்கு மட்டும் பெருமையில்லை, இந்தியாவிற்கே பெருமை.  தமிழர் ஊர்தியை ஒதுக்கி வைப்பதால் பிரதமர் நரேந்திர மோடிக்கு யாரும் கிரீடம் வைக்கப் போவதில்லை என்று குறிப்பிட்டார்

மேலும் படிக்கவும் ...
    குடியரசு தின அணி வகுப்பில் தமிழர் ஊர்தி செல்வது நல்லது, அது அனுமதிக்கப்பட வேண்டும் என முன்னாள் மத்திய இணை அமைச்சரும் பாஜகவை சேர்ந்தவருமான பொன் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

    தலைநகர் புதுடெல்லியில் குடியரசு தின விழாவை முன்னிட்டு வரும் 26-ம் தேதி பிரம்மாண்ட அணிவகுப்பு நடைபெறுகிறது. இதில் அனைத்து மாநிலங்களின் சார்பில் கலை பண்பாட்டு அலங்கார ஊர்திகள் இடம் பெறுவது வழக்கம். இந்த ஆண்டு நடைபெறும் அணிவகுப்பில் கலந்துகொள்ள தமிழக ஊர்திக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

    இதற்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். குடியரசுத் தின அணிவகுப்பில் தமிழக ஊர்தி இடம்பெற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதமும் எழுதியுள்ளார். இந்நிலையில்,
    விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் நடைபெற்ற நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்பாளர்கள் நேர்காணல் நிகழ்ச்சிக்கு சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்ட பாஜக முன்னாள் மத்திய இணை அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணனிடம் இந்த விவகாரம் தொடர்பாக செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

    அதற்கு பதிலளித்த பொன் ராதாகிருஷ்ணன், பேட்டியளித்தார், அப்போது பேசிய அவர், குடியரசு தின அணி வகுப்பில் தமிழர் ஊர்தி  செல்வது தமிழர்களுக்கு மட்டும் பெருமையில்லை, இந்தியாவிற்கே பெருமை. தமிழர் ஊர்தி செல்வது நல்லது, அது அனுமதிக்கப்பட வேண்டும். தமிழர் ஊர்தியை ஒதுக்கி வைப்பதால் பிரதமர் நரேந்திர மோடிக்கு யாரும் கிரீடம் வைக்கப் போவதில்லை.தமிழரின் பெருமையை பேசுவதில் நரேந்திரமோடியை போன்று வேறு எந்த பிரதமரும் இருந்ததில்லை என்று குறிப்பிட்டார்.

    மேலும் படிக்க: தமிழக அலங்கார ஊர்திக்கு ஏன் அனுமதி மறுப்பு: மத்திய அரசு விளக்கம்

    தொடர்ந்து பேசிய அவர், நகர்புற உள்ளாட்சி தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி தொடரும்., கூட்டணியோடு தேர்தலைச் சந்திக்கின்றோம். சிவகாசி மாநகராட்சியை பாஜகவிற்கு ஒதுக்க வேண்டும். அதிமுக ஒதுக்கும் என நம்புகிறோம். கொரோனா பரவலை தடுப்பதற்கு உரிய நடவடிக்கை எடுத்து, ஜனநாயக முறையில் தேர்தலை உடனடியாக நடத்த வேண்டும்.
    பட்டாசு குறித்து முழுமையாக ஆய்வு செய்து பட்டாசு தொழிலாளர்களுக்கு மறுவாழ்வு கிடைப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். பட்டாசு தொழில் நசிந்து போய்விடக் கூடாது ’ என்று கூறினார்.

    இதையும் படிங்க: நாட்டின் விடுதலைக்கு பங்களிக்காத பாஜக விடுதலைப் போராட்ட வீரர்களை புறக்கணிப்பதா? சீமான் கண்டனம்

    Published by:Murugesh M
    First published:

    Tags: BJP, Pon Radhakrishnan, Republic day, Tamilnadu government

    அடுத்த செய்தி