விருதுநகர் அருகே குல்லூர்சந்தையை சேர்ந்த கட்டிட தொழிலாளி நாகமுத்து (33). இவரது மனைவி நிர்மலா (30). இவர்களுக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். குடும்ப பிரச்சனை காரணமாக இருவரும் ஓராண்டாக பிரிந்து வாழ்ந்து வருகின்றனர்.
இந்நிலையில் கடந்த 9 ம்தேதி சேர்ந்து வாழலாம் என்று கூறி நாகமுத்து நிர்மலா தேவியையும் குழந்தைகளையும் அழைத்து வந்துள்ளார். ஆனால் நிர்மலாவைக் காணவில்லை என்று அவரது சகோதரர் மூர்த்தி நேற்று இரவு விருதுநகர் சூலக்கரை காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
Also read: என் மீது தவறு இல்லை.. பழிவாங்கும் நோக்கில் கைது நடவடிக்கை: நீதிமன்றத்தில் குமுறிய மீரா மிதுன்!
இது தொடர்பாக நாகமுத்துவிடம் போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் மனைவியின் நடத்தையில் சந்தேகமடைந்து அவரை கட்டையால் அடித்துக் கொலை செய்து வீட்டின் பின்புறம் உள்ள தகரசெட்டில் வைத்து எரித்து விட்டதாக நாகமுத்து தெரிவித்துள்ளார்.
சம்பவத்தன்று மனைவி தொடர்ந்து செல்போனில் பேசிக் கொண்டு இருந்ததாகவும், இதனால் ஆத்திரமடைந்து கொலை செய்ய முடிவு செய்துள்ளார். இதற்காக குழந்தைகளை தனது தந்தை வீட்டில் விட்டு விட்டு இரவு வீட்டில் வைத்து கொலை செய்ததாக போலீசாரிடம் தெரிவித்துள்ளார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
மேலும், நாகமுத்துவுக்கு அதே ஊரைச் சேர்ந்த முனிஸ்வரி என்ற பெண்ணுக்கும் தொடர்பு இருந்ததும், நிர்மலா இறந்த பிறகு அவரை எரிப்பதற்கு முனிஸ்வரி உதவியதும் போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
சம்பவ இடத்தை விருதுநகர் எஸ்.பி. மனோகர் மற்றும் விருதுநகர் டி.எஸ்.பி.அருணாச்சலம் ஆகியோர் நேரில் பார்வையிட்டு விசாரணை நடத்தினர். தொடர்ந்து, நாகமுத்து மற்றும் முனீஸ்வரியை கைது செய்த சூலக்கரை போலீசார் மேலும் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
செய்தியாளர் - கணேஷ்நாத்
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Crime News, Murder