உக்ரைனில் ரஷ்யா நடத்திவரும் தாக்குதலின் எதிரொலியாக சன்பிளவர், பாமாயில் உள்ளிட்ட சமையல் எண்ணெய் விலை அதிரடியாக உயர்ந்துள்ளது. இதனால் உணவு பொருட்களின் விலையும் உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
சமையலுக்கு பயன்படுத்தக்கூடிய சூரியகாந்தி எண்ணெய் ( ரீஃபைண்ட் ஆயில் ) 70 சதவிகிதம் உக்ரைனில் இருந்தும் 20 சதவிகிதம் ரஷ்யாவிலிருந்தும் தான் இந்தியாவிற்கு இறக்குமதி செய்யப்படுகிறது. தற்பொழுது அங்கு போர் நீடித்து வருவதால் சமையல் எண்ணெய் இறக்குமதி முற்றிலுமாக நிறுத்தப்பட்டுள்ளது.
இதன் எதிரொலியாக சமையலுக்கு பயன்படுத்த கூடிய ரீபைண்ட் ஆயில், பாமாயில், கடலெண்ணெய் போன்றவைகளின் விலை அதிரடியாக உயர்ந்துள்ளது. விருதுநகர் மார்க்கெட்டில் கடந்த வாரம் நல்லெண்ணெய் கிலோ ரூ 230-க்கு விற்ற நிலையில் தற்போது ரூ 50 உயர்ந்து ரூ 280க்கு விற்கப்படுகிறது. கடந்த வாரம் கடலை எண்ணெய் கிலோ ரூ 150 விற்ற நிலையில் தற்போது ரூ 20 உயர்ந்து ரூ170க்கு விற்பனையாகிறது.
Also Read : நியூட்ரினோ திட்டத்தைக் கைவிட வேண்டும் - பிரதமருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்
பாமாயிலும் விலையும் கடுமையாக உயர்ந்துள்ளது. கடந்த வாரம் ரூ125 க்கு விற்றது தற்போது ரூ 50 விலை உயர்ந்து ரூ175க்கு விற்கப்படுகிறது. சன் பிளவர் ஆயிலும் விலை உயர்ந்து காணப்படுகிறது. கடந்த வாரம் ரூ 135 விற்கப்பட்டது தற்போது ரூ 50 உயர்ந்து ரூ 185க்கு விற்கப்படுகிறது.
சன் பிளவர் ஆயில் தற்போது பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. வரும் காலங்களில் மேலும் விலை உயர வாய்ப்பு என வியாபாரிகள் தெரிவிக்கின்றனர். இதன் காரணமாக உணவுப் பொருட்களின் விலையும் கடுமையாக உயரும் அபாயம் உள்ளது.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.