முகப்பு /செய்தி /தமிழ்நாடு / விருதுநகர் அரசு மருத்துவமனையில் மாற்றுத்திறனாளிகள் திடீர் போராட்டம்

விருதுநகர் அரசு மருத்துவமனையில் மாற்றுத்திறனாளிகள் திடீர் போராட்டம்

மாற்றுத்திறனாளிகள் போராட்டம்

மாற்றுத்திறனாளிகள் போராட்டம்

Virudhunaga : விருதுநகர் அரசு மருத்துவமனை அருகே மாற்றுத்திறனாளிகள் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டதால் அங்கே பரபரப்பு ஏற்பட்டது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :

விருதுநகர் அரசு தலைமை மருத்துவமனையில் வாரம் தோறும் புதன் கிழமை மாற்றுத்திறனாளிகளுக்கான முகாம் புதன் கிழமை நடைபெறுவது வழக்கம்.

அதன்படி, புதன் கிழமையன்று மாற்றுத்திறனாளிகளுக்கான அடையாள அட்டை, ரயில் பாஸ், பஸ் பாஸ், உள்ளிட்ட அட்டைகள் வழங்கப்படுகின்றன. இந்த வாரம் முகாமில் கலந்துகொள்ள வருகை தந்த மாற்றுத்திறனாளிகள் காலை முதல் வெயிலில் காத்திருந்தனர்.

வழக்கமாக மதியம் 1 மணி வரை அனைத்து அட்டைகளும் வழங்கப்படும். ஆனால், இன்று 12 மணியுடன் முகாமை முடித்ததால் ஆத்திரமடைந்த மாற்றுத்திறனாளிகள் அரசு மருத்துவமமைனையிலேயே மறியலில் ஈடுபட்டனர்.

Must Read : மிஸ் கூவாகம் போட்டியை இந்த ஆண்டுமுதல் உளுந்தூர்பேட்டையில் நடத்த கோரிக்கை

இந்நிலையில், போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி சமரசம் செய்ததையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர். இதனால், அங்கே பரபரப்பு ஏற்பட்டது.

First published:

Tags: Physically challenged, Protest, Virudhunagar