ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

அதீத நினைவாற்றலால் 2 வயதில் டாக்டர் பட்டம்... பல்வேறு சாதனை புத்தகத்தில் இடம்பிடித்த சிறுவன் ஆத்விக்

அதீத நினைவாற்றலால் 2 வயதில் டாக்டர் பட்டம்... பல்வேறு சாதனை புத்தகத்தில் இடம்பிடித்த சிறுவன் ஆத்விக்

அதீத நினைவாற்றலால் 2 வயதில் டாக்டர் பட்டம் பெற்ற சிறுவன் ஆத்விக்

அதீத நினைவாற்றலால் 2 வயதில் டாக்டர் பட்டம் பெற்ற சிறுவன் ஆத்விக்

Sivakasi News | அதீத நினைவாற்றலால் டாக்டர் பட்டம் பெற்ற இரண்டு வயது சிறுவன், பல்வேறு சாதனைப் புத்தகத்திலும் இடம்பிடித்துள்ளான்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :

விருதுநகர் மாவட்டம் சிவகாசியை சேர்ந்த ராதாகிருஷ்ணன்-சத்யா தம்பதியின் 2 வயது மகன் ஆத்விக்குமார். தனது 1 வயது முதல் வீட்டில் நடக்கும் நிகழ்வுகளை நினைவில் வைத்து மீண்டும் நினைவுபடுத்தி கூறும் திறமை கொண்டுள்ளதை சிறுவனின் பெற்றோர் தெரிந்து வைத்துள்ளனர். சிறுவனின் நினைவாற்றலை மேம்படுத்தும் விதமாக ஒரு வயது முதல் அறிவு சார்ந்த தகவல்களை வரைபடமாக காட்டி அதனை நினைவு கொள்ளும் பயிற்சியை வழங்கியுள்ளனர். பல்வேறு வரைபடங்களில் உள்ள தகவல்களை எப்பொழுது கேட்டாலும் சொல்லும் திறன் கொண்ட இச்சிறுவன்  ஒன்றரை வயது முதல் 2 வயது வரை 6 மாதத்தில் மட்டும் 20க்கும் மேற்பட்ட பதக்கங்களை பெற்றுள்ளார்.

ஒரு வயது 7 மாதங்கள் இருந்தபோது பல்வேறு நாட்டுக் கொடிகள், சுதந்திர போராட்ட வீரர்களின் புகைப்படம் பார்த்து பெயர்களை சொல்வது,  வாகனங்களின் லோகோக்கள், இடங்களின் பெயர்கள், விலங்குகள், பறவைகள், உணவுப் பொருட்கள் என பெயர்களை சரியாக கூறியதால் வேர்ல்டு ரெக்கார்டு சான்றிதழ் மற்றும்  இந்தியன் புக் ஆப் ரெக்கார்ட்ஸ் சான்றிதழ், கலாம் உலக சாதனை, யூனிவர்செல் புக் ஆப் ரிக்கார்டு,இந்தியா புக் ஆப் ரிக்கார்டு உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட சாதனை புத்தகத்தில்  இடம்பெற்றுள்ளார் சிறுவன் ஆத்விக் குமார்.

கடந்த மாதம்   100வகையான படங்கள், 5 அரசியல் தலைவர்கள், 6 தேசிய தலைவர்கள், 25 வாகனங்களின்  லோகோக்கள்,  10 நல்ல பழக்கங்கள், 5 சுதந்திர போராட்ட வீரர்கள், 28 விலங்குகள், 15 பறவைகள், 30 உணவுப் பொருட்கள் உள்ளிட்ட பெயர்களை 3 நிமிடம் 32 வினாடிகளில் கூறி சாதனை படைத்தார். இதற்காக  ஜாக்கி புக் ஆப் டேலண்ட் சான்றிதழ் பெற்றுள்ளார். சிறு வயதில் அதீத நினைவாற்றல் கொண்ட இச்சிறுவனின் திறமையை ஊக்குவிக்கும் விதமாக சர்வதேச தமிழ் பல்கலைக்கழகம் சார்பாக  ரிக்கார்டு பிரேக்கிங் டாக்டர் பட்டம் வழங்கப்பட்டு கௌரவிக்கப்பட்டுள்ளது.

Also Read : பால் குடத்துடன் சென்ற இந்துக்கள்.. போராட்டத்தை நிறுத்தி வழிவிட்ட இஸ்லாமியர்கள்

சிறுவனின் நினைவாற்றல் அவனது கல்விக்கு மிகவும் பயனுள்ளதாக அமையும் என நம்பிக்கை தெரிவிக்கும் பெற்றோர் கலெக்டர் ஆக வேண்டும் என்ற சிறுவனின் ஆசையை நிறைவேற்றவும் தயாராக உள்ளதாகவும் கூறுகின்றனர். துவக்கத்தில் சிறுவன் செல்போனில் மூழ்கி இருந்ததாகவும் அப்போது இதுபோன்ற திறமைகள் வெளிப்படவில்லை என கூறும் பெற்றோர் செல்போன் பயன்பாட்டை தவிர்க்க வைத்ததாகவும் அதனை தொடர்ந்து சிறுவன் இந்த சாதனைகளை திறம்பட  செய்து வருவதாகவும் பெருமிதம் கொள்கிறார்கள்.

செய்தியாளர் : செந்தில்குமார், சிவகாசி

First published:

Tags: Sivakasi, Virudhunagar