ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

டீ குடிக்க சென்ற கேப்பில் போலீஸ் துப்பாக்கியுடன் போட்டோ ஷூட் நடத்திய கைதியின் உறவினர்.. 2 போலீசார் பணியிடை நீக்கம்!!

டீ குடிக்க சென்ற கேப்பில் போலீஸ் துப்பாக்கியுடன் போட்டோ ஷூட் நடத்திய கைதியின் உறவினர்.. 2 போலீசார் பணியிடை நீக்கம்!!

போலீஸ் துப்பாக்கியுடன் போட்டோவுக்கு போஸ் கொடுத்த கைதியின் உறவினர்.. 2 போலீசார் பணியிடை நீக்கம்!!

போலீஸ் துப்பாக்கியுடன் போட்டோவுக்கு போஸ் கொடுத்த கைதியின் உறவினர்.. 2 போலீசார் பணியிடை நீக்கம்!!

டீ குடிக்க சென்ற கேப்பில் போலீஸ் துப்பாக்கியுடன் போட்டோ ஷூட் நடத்திய கைதியின் உறவினரால் போலீசாருக்கு ஏற்பட்ட தலைவலி.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :

  போலீசார் துப்பாக்கியுடன் கைதியின் உறவினர் ஒருவர் வெளியிட்ட புகைப்படம் சர்ச்சையான நிலையில், இரண்டு போலீஸ்காரர்களை பணியிடை நீக்கம் செய்து விருதுநகர் எஸ்பி நடவடிக்கை மேற்கொண்டுள்ளார்.

  விருதுநகர் மாவட்டம் சாத்தூர் பகுதியைச் சேர்ந்த அன்பரசன், ஆறுமுக வேல் ஆகிய இருவரும் இருக்கன்குடி காவல் நிலையத்தில் காவலராக பணிபுரிந்து வருகின்றனர். இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு விருதுநகர் கிளை சிறையில் இருந்து விசாரணைக்காக ஜான்பாண்டியன் என்ற கைதியை அழைத்துக் கொண்டு துப்பாக்கியுடன் விருதுநகர் நீதிமன்றத்திற்கு சென்றனர்.

  விருதுநகர் நீதிமன்றத்தில் கைதியை ஆஜர்படுத்தி விட்டு பின்னர் அருகில் உள்ள டீக்கடையில் இரண்டு காவலர்களும் டீ குடிக்க சென்றுள்ளனர். அப்போது அங்கு வந்த ஜான்பாண்டியனின் உறவினர் ஒருவரிடம் இரண்டு காவலர்களும் துப்பாக்கியை கொடுத்து விட்டு டீ குடிக்க சென்றதாக கூறப்படுகிறது.

  Also Read : ரேஷன் அட்டைதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு... மாற்றம், திருத்த செய்ய சூப்பர் சான்ஸ்

  இந்த நிலையில் கைதி ஜான் பாண்டியனின் உறவினர் போலீசார் கொடுத்த துப்பாக்கியுடன் தன்னை விதவிதமாக புகைப்படம் எடுத்துக்கொண்டு, அதனை சமூக வலைதளங்களிலும் வெளியிட்டுள்ளார்.

  இதையடுத்து, கைதியின் உறவினர் கையில் போலீஸ் துப்பாக்கி இருந்தது சர்ச்சையை ஏற்படுத்தியது. இதையடுத்து விருதுநகர் மாவட்ட எஸ்.பி மனோகரன் விசாரணை நடத்தி வெளியாட்களிடம் காவலர் துப்பாக்கியை கொடுத்து அஜாக்கிரதையாக நடந்து கொண்டதற்காக காவலர் அன்பரசன், ஆறுமுகம்வேல்  ஆகியோரை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார்.

  செய்தியாளர் - M.செந்தில்குமார்

  Published by:Esakki Raja
  First published:

  Tags: Police, Virudunagar