Home /News /tamil-nadu /

தாயின் காதலனால் சிறுமிக்கு நேர்ந்த கொடுமை.. போக்சோ சட்டத்தில் இருவர் கைது

தாயின் காதலனால் சிறுமிக்கு நேர்ந்த கொடுமை.. போக்சோ சட்டத்தில் இருவர் கைது

சிறுமிக்கு பாலியல் தொல்லை

சிறுமிக்கு பாலியல் தொல்லை

பாண்டி முருகன் தொல்லை எல்லை மீறவே இதுகுறித்து சிறுமி தனது தாயிடம் கூறி அழுதுள்ளார்

    ஸ்ரீவில்லிப்புத்தூர் அருகே சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தாக தாய் உள்ளிட்ட இருவர் போக்சோ வழக்கில் கைது.

    விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே வத்திராயிருப்பு கீழத் தெருவை சேர்ந்த சிறுமி ஒருவருக்கு அவரது தாய் உடந்தையோடு ஒருவர் பாலியல் துன்புறுத்தல் கொடுப்பதாக 1098க்கு அழைப்பு வந்துள்ளது. அதையடுத்து, விருதுநகர் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் ஜானகி நேரில் சென்று விசாரணை நடத்தினார்.அப்போது, பாதிக்கப்பட்ட சிறுமியின் தந்தை இறந்துவிட்டதால் தாய் பூபதிக்கும், கூனம்பட்டியைச் சேர்ந்த பாண்டிமுருகன் என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது.

    Also Read: செல்போன் பேச்சால் ஆத்திரம்.. திருமணமான 5 மாதத்தில் இளம்பெண் குத்திக்கொலை - கணவர் வெறிச்செயல்

    இதன்காரணமாக இருவரும் ஒரே வீட்டில் சேர்ந்து வாழ்ந்து வந்துள்ளனர். வீட்டில் தாய் இல்லாத நேரத்தில் சிறுமிக்கு பாண்டிமுருகன் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். பாண்டி முருகன் தொல்லை எல்லை மீறவே இதுகுறித்து சிறுமி தனது தாயிடம் கூறி அழுதுள்ளார். ஆனால் இதுபற்றி யாரிடமும் கூறக் கூடாது என்று அச்சிறுமியை தாய் கண்டித்துள்ளார். மேலும் கையால் அடித்து காயப்படுத்தியது தெரியவந்தது.

    Also Read: கணவனை இழந்த பெண்ணிடம் காதல் வார்த்தை பேசி கர்ப்பமாக்கிய காவலர்.. நீதி கேட்டு 2 வருடமாக போராடும் அவலம்

    இதுகுறித்து, வத்திராயிருப்பு காவல் நிலையத்தில் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு சமூக பணியாளர் ஜானகி என்பவர் புகார் அளித்தார். அதையடுத்து, போக்சோ வழக்குப் பதிவு செய்து பாண்டி முருகன் மற்றும் பாதிக்கப்பட்ட சிறுமியின் தாய் பூபதி ஆகியோரை போலீஸார் நேற்று கைது செய்தனர்.

    செய்தியாளர் : M.செந்தில்குமார் (சிவகாசி)
    Published by:Ramprasath H
    First published:

    Tags: Crime News, Illegal affair, Illegal relationship, Pocso, POCSO case, Sexual harassment

    அடுத்த செய்தி