விருதுநகரில் தாயும் - மகளும் தெப்பத்தில் விழுந்து தற்கொலை செய்யும் மனதை பதற வைக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது.
விருதுநகர் மையபகுதியில் தெப்பக்குளம் உள்ளது. இங்கு நேற்று மாலை சிறுமியின் சடலம் மிதப்பதாக விருதுநகர் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் கிடைத்தது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறையினர் சிறுமியின் சடலத்தை மீட்டனர்.இதனை தொடர்ந்து விருதுநகர் பஜார் போலீசார் அப்பகுதியில் உள்ள கடைகளில் விசாரணை செய்ததில் கட்டையாபுரத்தைச் சேர்ந்த மில் தொழிலாளி பழனிவேல் மனைவி மகாலட்சுமி, அவரது மகள் கஜலட்சுமி காணாமல் போனது தெரியவந்தது.
காணாமல் போனவர்கள் இவர்கள்தான் என தெரிய வந்ததையடுத்து தீயணைப்புத் துறையினர் மீண்டும் தெப்பக்குளத்தில் மூழ்கி பெண்ணின் சடலத்தை மீட்டனர். அப்பெண் குடும்ப பிரச்னை காரணமாக தற்கொலை செய்திருக்கலாம் எனவும், 10 வருடத்திற்கு முன்பு காதல் திருமணம் செய்தவர்கள் என போலீஸார் விசாரணையில் தெரியவந்துள்ளது.விருதுநகர் பஜார் போலீசார் வழக்கு பதிவு செய்து கணவர் பழனிவேலிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
போலீஸார் அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்த போது இரண்டு பெண்களும் தெப்பக்குளத்தின் காம்பவுண்ட் சுவற்றின் மீது ஏறி குதிக்கும் காட்சிகள் பதிவாகியிருந்தது. தற்கொலை செய்ய விழுந்தவர்களை காப்பாற்றுவதற்காக நாய் அக்கம் பக்கத்தினரை கூக்குரலிட்டு அழைக்கும் காட்சிகளும் பதிவாகியுள்ளது. இந்தச்சம்பவம் தொடர்பாக போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
செய்தியாளர்: கணேஷ்நாத் (விருதுநகர்)
Published by:Ramprasath H
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.