முகப்பு /செய்தி /தமிழ்நாடு / நோயாளிகளின் தேவைகளை பூர்த்தி செய்வதே அதிகாரிகளின் முதல் பணி: அமைச்சர் தங்கம் தென்னரசு

நோயாளிகளின் தேவைகளை பூர்த்தி செய்வதே அதிகாரிகளின் முதல் பணி: அமைச்சர் தங்கம் தென்னரசு

அமைச்சர் தங்கம் தென்னரசு

அமைச்சர் தங்கம் தென்னரசு

இனி எதிர்காலத்தில் இது போன்ற தவறு நேரக்கூடாது என அதிகாரிகளை கடுமையாக எச்சரித்தார் அமைச்சர் தங்கம் தென்னரசு

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :

விருதுநகர் மாவட்டம் திருச்சுழி அரசு மருத்துவமனை கொரோனா சிகிச்சை மையத்தில் நோயாளிகளுக்கு வழங்கப்படும் உணவு குறித்து அமைச்சர் தங்கம் தென்னரசு திடீர் ஆய்வு  நடத்தினார்.

திருச்சுழி அரசு மருத்துவமனையில் கொரோனோ நோயாளிகளுக்கு தரமற்ற உணவு வழங்கப்பட்டதாக வந்த புகாரை அடுத்து அதிகாரிகளுக்கு டோஸ் விட்ட அமைச்சர் தங்கம் தென்னரசு, அரசு மருத்துவமனையில் வழங்கப்படும் உணவை ருசித்து பார்த்து ஆய்வு செய்தார்.

திருச்சுழி அரசு மருத்துவமனையில் 21 கொரோனோ நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர். இங்கு சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளுக்கு தரமற்ற உணவு வழங்கப்பட்டதாக நேற்று சமூகவலைதளங்களில் வீடியோ ஒன்று பரவியது.

இதனையடுத்து திருச்சுழி சட்ட மன்ற உறுப்பினரும், தொழிற்துறை அமைச்சருமான தங்கம் தென்னரசு திருச்சுழி அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு வழங்கப்படும் உணவு குறித்து திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

அப்பொழுது கொரோனா நோயாளிகளுக்கு சமைத்து வைக்கப்பட்டிருந்த உணவை ருசித்து பார்த்தார்.

அதை தொடர்ந்து உணவின் தரம் குறித்து வந்த  குற்றச்சாட்டு குறித்து அதிகாரிகளிடம் விளக்கம் கேட்டறிந்தார்.

Read More:   கொரோனாவால் உயிரிழந்தவரின் சடலத்தை ஆற்றில் தூக்கி எறியும் அதிர்ச்சி வீடியோ!

கொரோனா நோயாளிகளுக்கு தரமான உணவு வழங்குவது தான் முதல் பணி. நோயாளிகளின் தேவைகளை பூர்த்தி செய்வதே அதிகாரிகளின் முதல் பணி என அதிகாரிகளுக்கு டோஸ் விடுத்ததோடு,  இனி எதிர்காலத்தில் இது போன்ற தவறு நேரக்கூடாது என கடுமையாக எச்சரித்தார்.

விருதுநகர் செய்தியாளர் கணேஷ்நாத் அய்யம்பெருமாள்

First published:

Tags: Minister, Virudhunagar