விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீஆண்டாள் கோவிலில் மத்தியபிரதேச முதலமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் தன் மனைவியுடன் சாமி தரிசனம் செய்தார். அவருக்கு கோவில் நிர்வாகம் சார்பில் பூரண கும்ப மரியாதை செலுத்தப்பட்டது.
ஸ்ரீவில்லிபுத்தூரில் மத்தியபிரதேச முதலமைச்சர் தனது குடும்பத்தினருடன் வருகை தந்து, ஸ்ரீ ஆண்டாள் கோவிலில் சாமி தரிசனம் செய்தார், மத்திய பிரதேச முதலமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் கடந்த இரண்டு நாட்களாக தமிழ்நாட்டில் உள்ள பிரபலமான கோவில்களில் சாமி தரிசனம் செய்து வருகிறார்.
அவர், ஸ்ரீரங்கம் ஸ்ரீரங்கநாதர் கோவில் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் குடும்பத்தினருடன் சாமி தரிசனம் செய்த முதலமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் கோவிலுக்கு வருகை தந்தார். அவருக்கு ஸ்ரீ ஆண்டாள் கோவில் முன்பு பூரண கும்ப மரியாதையுடன் வரவேற்பு அளிக்கப்பட்டது.
கோவிலுக்குள் அழைத்துச் செல்லப்பட்ட அவருக்கு கோவில் சார்பில் மரியாதை செலுத்தப்பட்டது. தொடர்ந்து, ஸ்ரீ ஆண்டாள் கோவிலில் சாமி தரிசனம் செய்த அவர், ஆண்டாள் பிறந்த நந்தவனம் அதன் பின்பு வடபத்ர சயனர் கோவிலில் சாமி தரிசனம் செய்தார். தமிழக அரசின் முத்திரைச் சின்னமான ராஜகோபுரம் முன்பு தனது மனைவியுடன் படம் எடுத்துக்கொண்டார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த சிவராஜ் சிங் சவுகான், தான் உலக நன்மைக்காக தென்னிந்தியாவில் உள்ள முக்கியமான கோவில்களில் வழிபாடு நடத்தி வருவதாகவும் அதன் அடிப்படையிலேயே ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் கோவிலுக்கு வருகை வந்திருப்பதாகவும், மேலும் கொரோனா என்ற கொடிய நோயை விரட்ட ஸ்ரீ ஆண்டாள் சன்னதியில் வழிபாடு செய்திருப்பதாகவும் கூறினார்.
Must Read : திமுகவும் ஊழலும் ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள்: பாஜக தலைவர் ஜே.பி.நட்டா விமர்சனம்
தொடர்ந்து ஸ்ரீவில்லிபுத்தூரில் இருந்து பலத்த பாதுகாப்புடன் புறப்பட்டு சென்றார். முன்னதாக, மத்திய பிரதேச முதலமைச்சர் ஸ்ரீ ஆண்டாள் கோவிலுக்கு வருவதையொட்டி சுமார் ஒன்றரை மணி நேரம் பக்தர்கள் யாரும் கோவிலுக்குள் அனுமதிக்கப்படவில்லை. அங்கே, கடுமையான போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
செய்தியாளர் - செந்தில்குமார், சிவகாசி.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Aandal, Shivraj Singh Chouhan