• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • வேலையை விட்டு நீக்கியதால் ஆத்திரம்.. லாரி செட் உரிமையாளரை பழித்தீர்த்த லோடுமேன்கள்

வேலையை விட்டு நீக்கியதால் ஆத்திரம்.. லாரி செட் உரிமையாளரை பழித்தீர்த்த லோடுமேன்கள்

லாரி செட் உரிமையாளர் பால் பாண்டி

லாரி செட் உரிமையாளர் பால் பாண்டி

முன் விரோதம் காரணமாக பால்பாண்டியை கொலை செய்ததாக லாரி செட்டில் முன்பு வேலை செய்த லோடுமேன் இருவர் கைது செய்யப்பட்டனர்.

  • Share this:
    விருதுநகரில் லாரி செட்  உரிமையாளர் முன் விரோதம் காரணமாக வெட்டிக் கொலை செய்யப்பட்ட வழக்கில் லோடுமேன் இருவர் கைது செய்யப்பட்டனர்.

    விருதுநகர் அல்லம்பட்டி ஆத்துமேடு பகுதியை சேர்ந்தவர் பால்பாண்டி (59).விருதுநகர் இரயில்வே பீடர் சாலையில் லாரி செட் நடத்தி வருகிறார். இவர் நேற்றுமுன்தினம் இரவு 10:30 மணி அளவில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார். ரயில்வே பீடர் சாலையில் மாலைப்பேட்டை தெரு  அருகே டூவிலரில் சென்று கொண்டிருந்த பால்பாண்டியை  மர்ம நபர்கள் வழி மறித்து வெட்டிவிட்டு தப்பி ஓடி விட்டனர். இதில் சம்பவ இடத்திலேயே பால்பாண்டி உயிரிழந்தார். கொலைக்கான காரணம் உடனடியாக தெரியவில்லை.முன் விரோதம் காரணமாக இந்த கொலை நடந்திருக்கலாம் என்று கூறப்பட்டது. இது குறித்து விருதுநகர் மேற்கு காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

    இந்நிலையில்  பால்பாண்டியிடம் முன்பு வேலை செய்த லோடு மேன்கள் மணிகண்டன்,   சூசை இமானுவேல் இருவரையும் பிடித்து விசாரணை செய்தனர். விசாரணை செய்ததில் இருவரும் கொலை செய்ததை ஒப்புக்கொண்டனர்.கடந்த 1 வருடத்திற்கு முன்பு தங்களை பணியிலிருந்து  நீக்கியதால் பணி இல்லாமல் இருந்து வந்த விரக்தியில் வேறு பணி கிடைக்காதலும், அந்த விரக்தியிலிருந்த இருவரும் பால்பாண்டியை கொல்ல திட்டமிட்டனர்.

    அதன்படி நேற்றுமுன்தினம் இரவு இருவரும் குடித்துவிட்டு பால்பாண்டி லாரிசெட்டை பூட்டிவிட்டு வரும் நேரத்தை அறிந்து காத்திருந்தனர்.  இருசக்கர வாகனத்தில் வரும்போது வழிமறித்து இருவரும் அரிவாளால் பால்பாண்டியை சரமாரியாக தலை, கழுத்து உள்ளிட்ட பல இடங்களில் வெட்டி கொலை செய்ததாக தெரிவித்தனர்.இதனையடுத்து இருவரையும் போலீசார் கைது செய்தனர். இச்சம்பவம் விருதுநகரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    செய்தியாளர் : கணேஷ்நாத் அய்யம்பெருமாள்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Ramprasath H
    First published: