ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

Long tongue | நாக்கால் உலக சாதனை படைக்க துடிக்கும் விருதுநகர் இளைஞர்

Long tongue | நாக்கால் உலக சாதனை படைக்க துடிக்கும் விருதுநகர் இளைஞர்

Long tongue | நாக்கால் உலக சாதனை படைக்க துடிக்கும் விருதுநகர் இளைஞர்

நீளமான நாக்கால் ஓவியம் வரைதல், திருக்குறள் எழுதுதல் என அசாத்தி திறமையை வெளிப்படுத்தி வரும் இளைஞர், கின்னஸ் சாதனை படைக்க தீவிர முயற்சி மேற்கொண்டு வருகிறார்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :

எல்லையே இல்லாமல் சதா பேசிக் கொண்டிருப்பவர்களை உனக்கு நாக்கு ரொம்ப நீளம் என வேடிக்கையாக கூறுவது உண்டு. ஆனால் பிறவிலேயே நீளமான நாக்கை கொண்டுள்ள இளைஞர் ஒருவர், அதன் மூலம் திறமையை வெளிப்படுத்தி வருகிறார்.

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அடுத்த திருத்தங்கலை சேர்ந்த பிரவீன் அங்குள்ள பொறியியல் கல்லூரியில் இறுதி ஆண்டு படித்து வருகிறார். பொதுவாக ஆண்களின் நாக்கு சராசரியாக 8.5 சென்டிமீட்டரும், பெண்களின் நாக்கு 7.9 சென்டிமீட்டரும் இருக்கும் நிலையில், பிரவீனின் நாக்கு 10.8 சென்டிமீட்டராக உள்ளது.

நீளமான நாக்கால் சர்வ சாதாரணமாக ஒரு நிமிடத்தில் 110 முறை மூக்கை தொடுகிறார். கையை மடித்து ஒரு நிமிடத்தில் 142 முறை நாக்கால் தொட்டு அசத்துகிறார். இவரது சாதனைகள் இந்தியன் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் மற்றும் ஏசியன் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸில் இடம்பெற்றுள்ளன. இதேபோன்று 247 தமிழ் எழுத்துக்களை ஒரு மணி நேரம் 22 நிமிடம் 26 வினாடிகளில் நாக்கால் எழுதி அசத்தியுள்ளார்.

' isDesktop="true" id="485425" youtubeid="sWKPSqepW24" category="tamil-nadu">

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

மேலும் படிக்க... இன்றைய காலை தலைப்புச் செய்திகள் (ஜூன் 20, 2021)

1,330 திருக்குறளையும் நாக்கல் எழுதி உலக சாதனை படைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாகவும், உலகத் தலைவர்களின் உருவப்படங்களை நாவால் வரைய கவனம் செலுத்தி வருவதாகவும் பிரவீன் தெரிவித்துள்ளார்.

First published:

Tags: Painting, Virudhunagar