Home /News /tamil-nadu /

திமுக பெண் கவுன்சிலர் தற்கொலை முயற்சி.. தேர்தல் செலவுக்கு வாங்கிய கடனை செலுத்த முடியாததால் விபரீத முடிவு?

திமுக பெண் கவுன்சிலர் தற்கொலை முயற்சி.. தேர்தல் செலவுக்கு வாங்கிய கடனை செலுத்த முடியாததால் விபரீத முடிவு?

திமுக பெண் கவுன்சிலர் தற்கொலை முயற்சி..

திமுக பெண் கவுன்சிலர் தற்கொலை முயற்சி..

Dmk Councilor | பொது இடத்தில் வைத்து தன்னை ஆபாசமாகப் பேசியதாக மூன்று பேர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி ஆஷா காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார்.

    விருதுநகரில் திமுக பெண் கவுன்சிலர் தற்கொலைக்கு முயன்றுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    விருதுநகர் 5-வது வார்டு நகர்மன்ற உறுப்பினர் ஆஷா (33).  இவர் அண்மையில் நடந்த விருதுநகர் நகராட்சி தேர்தலில் 5வது வார்டில் திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

    இந்நிலையில், பொது இடத்தில் வைத்து தன்னை ஆபாசமாகப் பேசியதாக மேனகா, மாரீஸ்வரி, கலைச்செல்வி ஆகிய மூன்று பேர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி ஆஷா அண்மையில் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார்.

    இதைத்தொடர்ந்து, ஆஷா அளித்த புகாரின் பேரில் விருதுநகர் மேற்கு காவல்நிலையம் போலீசார் வழக்குப் பதிவு விசாரணை மேற்கொண்டு வந்துள்ளனர்.

    இந்நிலையில்,  கவுன்சிலர் ஆஷா இன்று தனது வீட்டில் தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளார்.  இதைத்தொடர்ந்து, அவர் உடனடியாக மீட்கப்பட்டு விருதுநகர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

    இதனிடையே,  தற்கொலை முயற்சிக்கு முன்பு கவுன்சிலர் ஆஷா வெளியிட்டுள்ள ஆடியோவில்,  5-வது வார்டு பொதுமக்களுக்கு..  நான் ஆஷா பேசுறேன். அக்கா.. அண்ணே..  நான் ஏதாவது தப்பு பண்ணிருந்தாலோ, யாருக்காவது ஏதாவது செய்யாமல் இருந்தாலோ, டைரக்டா நீங்க என்கிட்ட கேளுங்க. ரொம்பப் பேரு நான் கஷ்டப்படற அளவுக்கு நடந்துக்கிறாங்க. என்னை அசிங்கப்படுத்துறாங்க. ரொம்ப மனஉளைச்சல்ல இருக்கேன்.  என்னால முடியல. என்கிட்ட வேணும்னே சண்டை இழுக்கிறாங்க.

    திமுக அரசின் ஓராண்டுப் பயணமும்.. சர்ச்சைகளும்!

    என்னைக் கோபப்படுத்தி சண்டை போடற அளவுக்கு நடந்துக்கிறாங்க. நான் யார்கிட்டயும் தேவையில்லாம எந்தப் பிரச்சனைக்கும் போகல; வரல. என்னை எந்தப் பிரச்சனைக்கும் யாரும் இழுக்காம இருந்தா சரி. என்னை வச்சு சண்டை போட்டு வேடிக்கை பார்த்துட்டு இருக்காங்க. எல்லா வீட்லயும் ஏறி, இறங்கித்தான் ஓட்டு கேட்டேன். என்னை ஜெயிக்க வச்சீங்க. இப்ப, நான் என்ன செய்யிறதுன்னு தெரியாத நிலையில இருக்கேன்.

    தாங்க முடியாத அளவுக்கு வேதனையா இருக்கு.  நான் தப்பா பேசிருந்தா, என்னை மன்னிச்சிருங்க.” என உடைந்த குரலில் பேசியிருக்கிறார்.

    கவுன்சிலரைப் புலம்பவைத்த பின்னணி என்ன என்று பார்த்தால்,

    கவுன்சிலர் ஆஷா-வின் அம்மா, பொதுமக்களிடம் சீட்டு பிடித்து வந்திருக்கிறார். அவரிடம் சீட்டுக்குப் பணம் செலுத்திய சிலருக்கு பணம் திரும்பக்கிடைக்காத நிலையில், அவர்கள் வீட்டுக்கு வந்து பணம் கேட்டு திட்டியிருக்கின்றனர் என கூறப்படுகிறது. ஆனால் ஒரு தரப்போ உள்ளாட்சி தேர்தலின்போது விருதுநகரில் 36 வார்டுகளிலும் கோடிக்கணக்கில் பணம் புரண்டது. ஓட்டுக்கு ரூ.500 முதல் 2 ஆயிரம் வரை புரண்டது. அதேபோல் ஆஷா வார்டான 5 வது வார்டிலும் பணம் புரண்டது. அந்த பணம் எல்லாம் கடன் வாங்கி செலவழித்ததாகவும் கூறப்படுகிறது.

    இந்நிலையில் கடன் கொடுத்தவர்கள் திரும்ப கேட்டதாலும் ஆஷா மனமுடைந்து தற்கொலை முயற்சி மேற்கொண்டார் எனவும் கூறப்படுகிறது.

    இதனிடையே, விருதுநகர் மேற்கு காவல் நிலையம், ஆஷா-வின் தற்கொலை முயற்சியை வழக்கில் காட்டவில்லை. மூன்றுபேர் ஆபாசமாகத் திட்டினார்கள் என்று மட்டும் வழக்குபதிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

    செய்தியாளர் - கணேஷ்நாத் அய்யம்பெருமாள்
    Published by:Esakki Raja
    First published:

    Tags: DMK, Virudhunagar

    அடுத்த செய்தி