ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

பேசிட்டிருக்கோம்ல... குறுக்க என்ன பேச்சு... கட்சி வேட்பாளர் கணவரின் கன்னத்தில் பளார் பளார்.. போலீஸ் முன் திமுக நிர்வாகி ஆவேசம்

பேசிட்டிருக்கோம்ல... குறுக்க என்ன பேச்சு... கட்சி வேட்பாளர் கணவரின் கன்னத்தில் பளார் பளார்.. போலீஸ் முன் திமுக நிர்வாகி ஆவேசம்

திமுக நிர்வாகிகள்

திமுக நிர்வாகிகள்

சிவகாசியில் வேட்பாளரின் கணவரின் கன்னத்தில் தி.மு.க நகர பொறுப்பாளர் அறைந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :

சிவகாசியில் தி.மு.க பெண் வேட்பாளரின் கணவர் கன்னத்தில் காவல்துறையினர் முன்னிலையில் தி.மு.க நகர பொருப்பாளர் அறைந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

தமிழ்நாட்டில் நகர்புற உள்ளாட்சித் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் வேட்புமனுத் தாக்கல் நிறைவடைந்து வேட்புமனு பரிசீலனை தீவிரமாக நடைபெற்றுவருகிறது.

சிவகாசியில் 48 வார்டுகளை கொண்ட புதிதாக அறிவிக்கப்பட்ட சிவகாசி மாநகராட்சியில் போட்டியிடக்கூடிய அ.தி.மு.க, தி.மு.க, கம்யூனிஸ்ட் கட்சி, விஜய் மக்கள் இயக்கம், பா.ஜ.க, நாம் தமிழர் கட்சி, மக்கள் நீதி மையம் என சுமார் 322 பேர் தங்களது வேட்பு மனுக்களை மாநகராட்சியில் தாக்கல் செய்தனர். வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை நடைபெற்று வருகிறது.

திமுக நிர்வாகி

இந்நிலையில் வேட்புமனு பரிசீலனைக்கு அதிமுகவினர் அதிகமாக மாநகராட்சி அலுவலகத்தில் சென்றுள்ளதாகவும் தங்களை அனுமதிக்க வேண்டும் எனவும் தி.மு.கவினர் காவல்துறையுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

தொடர்ந்து வாக்குவாதம் நீடித்த நிலையில் திருத்தங்கல் நகர திமுக பொறுப்பாளர் உதயசூரியன் 20-வது வார்டில் போட்டியிடும் பெண் வேட்பாளரின்  கணவர் கருப்பசாமியை காவல்துறையினர் முன்னர் பளார் பளாரென அறைந்தார். இதனால் மாநகராட்சி அலுவலகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

First published:

Tags: DMK, Local Body Election 2022