விருதுநகர் அருகே கூட்டுறவு வங்கி ஊழியர் தூக்கிட்டு தற்கொலை.. பணிச்சுமை காரணமா? போலீசார் விசாரணை

விருதுநகர்

மாவூத்து மலையடிவார பகுதியில் உள்ள மரத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலம் கிடப்பதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது.

  • Share this:
    விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மலை அடிவாரப் பகுதியில் கூட்டுறவு வங்கி ஊழியர் மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள மகாராஜபுரம் நடுத்தெரு பகுதியில் வசித்து வந்தவர் தர்மராஜ் (53). இவர் அதே பகுதியில் உள்ள கூட்டுறவு சொசைட்டி வங்கியில் கிளர்க்காக  பணிபுரிந்து வந்துள்ளார் . கடந்த இரண்டு தினங்களாக தர்மராஜாவை காணவில்லை என உறவினர்கள் வத்திராயிருப்பு காவல் நிலையத்தில் புகார் தெரிவித்துள்ளனர்.

    இந்நிலையில் இன்று மாவூத்து மலையடிவார பகுதியில் உள்ள மரத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலம் கிடப்பதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. பின்னர் தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக கிடந்தது காணாமல் போன தர்மராஜ் என உறுதி செய்தனர்.

    இதையடுத்து, அவரது உடலை பிரேத பரிசோதனைக்காக வத்திராயிருப்பு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
    தொடர்ந்து, தர்மராஜ் பணிச்சுமை காரணமாக தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது கொலையா? அல்லது வேறு எதும் காரணமா என காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    செய்தியாளர் - செந்தில்குமார்



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Esakki Raja
    First published: