Home /News /tamil-nadu /

யானை வேட்டை.. தந்தங்களுடன் பிடிபட்ட நபர்கள் - மேற்கு தொடர்ச்சி மலையில் தொடரும் அத்துமீறல்

யானை வேட்டை.. தந்தங்களுடன் பிடிபட்ட நபர்கள் - மேற்கு தொடர்ச்சி மலையில் தொடரும் அத்துமீறல்

யானை தந்தங்கள் கடத்தல்

யானை தந்தங்கள் கடத்தல்

Elephant Hunting: பாதுகாக்கப்பட்ட வனப் பகுதியில் நவீன ஆயுதங்கள் மூலம் வன விலங்குகள் கொல்லப்படுவதால் வனத்திற்குள் நக்சலைட் நடமாட்டமும் அதிகரிக்க வாய்ப்பு

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
    விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலை புல்பத்தி வனப்பகுதியில் 10 லட்ச ரூபாய் மதிப்பிலான பிடிபட்ட யானை தந்தம். யானையை வேட்டையாடிய கும்பலை  வனத்துறையினர் தேடி வருகின்றனர்.  

    விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே மேற்கு தொடர்ச்சி மலை பகுதி அமைந்துள்ளது. இந்த மலையில் ஏராளமான வனவிலங்குகள் வசித்து வருகின்றன. இந்த மலை பாதுகாக்கப்பட்ட புலிகள் வாழும் சரணாலயமாக அறிவிக்கப்பட்டுள்ளது. .
    இருப்பினும் வன உயிரின அதிகாரிகளின் மெத்தனப் போக்கால் ராஜபாளையம் அருகே புல் பத்தி காட்டுப்பகுதியில் சுமார் 10 லட்சம் மதிப்பிலான யானை தந்தங்கள் 2 கைப் பற்றப்பட்டுள்ளது. இதுகுறித்து சுந்தரராஜபுரம் பகுதியில் இரண்டுக்கும் மேற்பட்ட நபர்களை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும்  யானையை வேட்டையாடிய கும்பலை வலை வீசி தேடி வருகின்றனர்.

    இங்குள்ள வன பாதுகாவலர்கள் உட்பட அதிகாரிகள் கண்டு கொள்ளாததால் கடந்த சில வருடங்களாக இப்பகுதியில் எண்ணற்ற வனவிலங்குகள் ஆயுதங்கள் மற்றும் நாட்டு வெடிகுண்டுகள் மூலம் வேட்டையாடி கொல்லப்பட்டுள்ளது. இதனால் எதிர்காலத்தில் காடுகள் அழியும் நிலை ஏற்படலாம் என வன உயிரின ஆர்வலர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

    Also Read:  இளம்பெண்ணுடன் உல்லாசம்.. வீடியோ எடுத்து மிரட்டிய நடன ஆசிரியர் - தாயும் உடந்தை

    இதனை தடுக்க  வேண்டிய வனக் காவலர்கள் மெத்தனமாக இருந்து வருகின்றனர். எதிர்கால குற்றங்களை தடுக்க மாவட்ட நிர்வாகம் துறை ரீதியாக நடவடிக்கை எடுத்து வன உயிரினங்களை பாதுகாக்க முன்வர வேண்டுமென வன உயிரின ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்தனர். பாதுகாக்கப்பட்ட வன பகுதியில் நவீன ஆயுதங்கள் மூலம் வன விலங்குகள் கொல்லப்படுவதால்  வனத்திற்குள் நக்சலைட் நடமாட்டமும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாகவும்,  மாவட்ட நிர்வாகம் துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

    செய்தியாளர்: M.செந்தில்குமார் (சிவகாசி)
    Published by:Ramprasath H
    First published:

    Tags: Crime News, Elephant, Elephant and calf, Forest

    அடுத்த செய்தி