Home /News /tamil-nadu /

‘கட்சி மாறினால் வீடு தேடி வெட்டுவேன்’.. அதிமுக ஒன்றிய செயலாளர் சர்ச்சை பேச்சு.. கைது செய்ய முயன்றபோது மாடியில் இருந்து குதித்ததில் கால் முறிவு..

‘கட்சி மாறினால் வீடு தேடி வெட்டுவேன்’.. அதிமுக ஒன்றிய செயலாளர் சர்ச்சை பேச்சு.. கைது செய்ய முயன்றபோது மாடியில் இருந்து குதித்ததில் கால் முறிவு..

அதிமுக நிர்வாகி சர்ச்சை பேச்சு

அதிமுக நிர்வாகி சர்ச்சை பேச்சு

சண்முகக்கணி மீது கொலை மிரட்டல், அச்சுறுத்தும் வகையில் நடந்து கொண்டது, கலவரத்தை ஏற்படுத்தி பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் விதமாக பேசியது ஆகிய 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

    கட்சி மாறினால் வீடு தேடி வெட்டுவேன் என பேசிய அதிமுக ஒன்றிய செயலாளர் சண்முககனியை கைது செய்ய முயன்றபோது மாடியில் இருந்து குதித்ததில் கால் முறிவு ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

    நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் பணிகளில் அரசியல் கட்சிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. அதன்படி, கடந்த 28ம் தேதி விருதுநகர் மாவட்டம்,சாத்தூரில் நடைபெற்ற அதிமுக ஆலோசனை கூட்டத்தில் அதிமுக கிழக்கு ஒன்றிய செயலாளர் சண்முகக்கணி கட்சியினர் மத்தியில் பேசினார். அப்போது,  “அதிமுகவில் போட்டியிட்டு வெற்றி பெற்றுவிட்டு கட்சி மாறி போனால் அவனை வீடு தேடி வெட்டுவேன்.

    மாவட்ட செயலாளரிடம் சொல்லிவிட்டு வெட்டுவேன், என் வெட்டு முதல் வெட்டாக இருக்கும், உங்கள் பிரேத பரிசோதனை அரசு மருத்துவமனையில்தான் இருக்கும்” என கட்சியினரை மிரட்டும் வகையில் பேசியதை பரபரப்பை ஏற்படுத்தியது.



    இது குறித்து சண்முகக்கணி மீது கொலை மிரட்டல், அச்சுறுத்தும் வகையில் நடந்து கொண்டது, கலவரத்தை ஏற்படுத்தி பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் விதமாக பேசியது ஆகிய 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்த சாத்தூர் காவல்நிலைய போலீசார் அவரை தனிப்படை அமைத்து தேடி வந்தனர்.

    இதையும் படிங்க: அனைத்துக் கட்சி கூட்டம்... பாஜகவை தொடர்ந்து அதிமுகவும் புறக்கணிப்பு


    இந்நிலையில் அவரது வீட்டில் பதுங்கி உள்ளதாக கிடைத்த தகவலை தொடர்ந்து அங்கு சென்ற காவல்துறை அவரை கைது செய்ய முயன்ற போது வீட்டின் மாடியிலிருந்து குதித்து தப்பித்து செல்ல முயன்றார். அப்போது தவறி விழுந்ததில் அவருக்கு கால் முறிவு ஏற்பட்டு தற்பொழுது கோவில்பட்டி தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
    Published by:Murugesh M
    First published:

    Tags: ADMK, Arrest, Local Body Election 2022

    அடுத்த செய்தி