Home /News /tamil-nadu /

இரிடியம் விற்பனை: ரிசர்வ் வங்கியில் பணம்- ரூ.20 லட்சம் மோசடி செய்தவரை கைது செய்த காவல்துறை

இரிடியம் விற்பனை: ரிசர்வ் வங்கியில் பணம்- ரூ.20 லட்சம் மோசடி செய்தவரை கைது செய்த காவல்துறை

மாதிரிப் படம்

மாதிரிப் படம்

விருதுநகரில் வெளிநாட்டில் இரிடியம் விற்ற பணம் ரிசர்வ் வங்கியில் இருப்பதாகக் கூறி 20 லட்சம் ரூபாய் மோசடி செய்த நபர் குற்றப்பிரிவு போலீசாரிடம் சிக்கியுள்ளார்.

    சென்னை பல்லாவரத்தைச் சேர்ந்தவர் 32 வயதான முகம்மது தமீம் பேக். காரியாப்பட்டியைச் சேர்ந்த பாலமுருகன் இவரது நண்பர்.  இரிடியம் விற்பனை மூலம் கிடைத்த பணத்தில் பயனாளியாக சேர்ந்து பணம் சம்பாதிக்க தன்னிடம் திட்டம் இருப்பதாகக் கூறியுள்ளார்.

    அதுகுறித்து தெரிந்து கொள்ள கடந்த 2015ம் ஆண்டு ஸ்ரீவில்லிப்புத்தூரில் உள்ள தனியார் பால் பண்ணை அதிபர் ராம்பிரபு ராஜேந்திரன் என்பவரை அறிமுகப்படுத்தியுள்ளார்.

    அப்போது, ராம்பிரபு தன்னிடமுள்ள பல கோடி ரூபாய் மதிப்பிலான இரிடியத்தை, ஆஸ்திரேலியா இரிடியம் கம்பெனிக்கு இந்திய அரசாங்கத்தின் உதவியுடன் விற்றதாக கூறியுள்ளார். அதற்காக 10 ஆயிரம் கோடி ரூபாய் பெறப்பட்டதாகவும் அதில் தன்னுடைய பங்குத் தொகையாக ரிசர்வ் வங்கியில் குறிப்பிட்ட தொகை இருப்பதாகக் கூறி அதற்கான ஆவணங்களையும் காட்டியுள்ளார்.

    அந்த பணத்தை வங்கியிலிருந்து எடுப்பதற்கு தனக்கு முன்தொகை தேவைப்படுவதாக குறிப்பிட்ட அவர், ஒரு லட்சம் ரூபாய் கொடுத்தால் அதற்குப் பதிலாக 10 லட்சம் ரூபாய் தருவதாக ஆசை வார்த்தை கூறியுள்ளார்.

    மேலும் 10 லட்சம் மொத்தமாகக் கொடுத்தால் 10 கோடி ரூபாய் கொடுப்பதாகவும் வாக்குறுதி அளித்துள்ளார். இதனை நம்பி முகம்மது தமீம் 10 லட்சம் ரூபாயை ராம்பிரபுவிடம் கொடுத்துள்ளார்.

    தனது நண்பர் வேலு என்பவரிடம் இதுகுறித்து கூற, அவரும் 10 லட்சம் ரூபாய் கொடுத்துள்ளார். அவர்களுக்கு வெற்று காசோலை ஒன்றைக் கொடுத்து 6 மாதத்தில் பணம் வங்கியில் வரவு வைக்கப்படும் என உறுதி கூறியுள்ளார் ராம்பிரபு.

    ஆனால் குறிப்பிட்டபடி 6 மாதங்களுக்குப் பிறகு பணம் தரவில்லை. அதன்பின் மூன்றாண்டுகளாக பணத்தைத் தராமல் இழுத்தடித்து வந்துள்ளார்.

    இதனால் ஏமாற்றமடைந்த இருவரும் வத்திராயிருப்பு காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். போலீசார் நடத்திய விசாரணையில் இதுபோல் பலரிடம் மோசடியில் ஈடுபட்ட பகீர் தகவல் கிடைத்தது.

    காதலிக்கு வேறு ஒருவருடன் நிச்சியதார்த்தம்.. ஆத்திரத்தில் ஊர் முழுவதும் புகைப்படத்துடன் போஸ்டர் ஓட்டிய காதலன்..

    2019ம் ஆண்டு எஸ்.பி. அலுவலகத்தில் புகார் அளிக்கச் சென்ற போது ராம்பிரபு பணத்தை ஓராண்டுக்குள் வட்டியுடன் கொடுத்து விடுவதாகக் கூறியுள்ளார். ஆனால் அப்போதும் பணம் தராதநிலையில் வற்புறுத்தி கேட்ட போது கொலை மிரட்டல் விடுத்ததாகக் கூறப்படுகிறது.

    இதனையடுத்து முகமது தமிம் விருதுநகர் குற்றப்பிரிவு போலீசாரிடம் புகார் அளித்தார். மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் தேடி வந்த நிலையில் பழனி அருகே ராம்பிரபுவை கைது செய்தனர்.

    விருதுநகர் குற்றவியல் நீதிமன்றத்தில் அவரை ஆஜர் படுத்தி ஸ்ரீவில்லிபுத்தூர் சிறையில் அடைத்தனர்.
    Published by:Karthick S
    First published:

    Tags: Crime News, Police

    அடுத்த செய்தி