முகப்பு /செய்தி /தமிழ்நாடு / 4 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை : முதியவருக்கு ஆயுள், ரூ.10 லட்சம் நஷ்ட ஈடு வழங்க உத்தரவு

4 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை : முதியவருக்கு ஆயுள், ரூ.10 லட்சம் நஷ்ட ஈடு வழங்க உத்தரவு

பாலியல் தொல்லை : முதியவருக்கு ஆயுள்

பாலியல் தொல்லை : முதியவருக்கு ஆயுள்

Virudhunagar District : குற்றம்சாட்டப்பட்ட முதியவர் சுந்தர்ராஜ்க்கு போக்சோ நீதிமன்ற நீதிபதி தனசேகரன் ஆயுள் தண்டனை வழங்கியும் மற்றும் ரூ.1000 அபராதம் விதித்தும் தீர்ப்பளித்தார்.

  • Last Updated :

தமிழகத்தில் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் தொல்லை குற்றங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றது. விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே 4 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததற்காக முதியவருக்கு ஆயுள் தண்டனை மற்றும் 10 லட்சம் ரூபாய் நஷ்ட ஈடு வழங்க போக்சோ நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டார்.

கடந்த 2019 ஆம் வருடம் சாத்தூர் ஒத்தையால் கிராமத்தைச் சேர்ந்த சுந்தர்ராஜ் என்ற முதியவர் தனது வீட்டிற்கு அருகில் விளையாடிக்கொண்டிருந்த 4 வயது சிறுமியை பாலியல் தொந்தரவு செய்ததாக சாத்தூர் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வந்தனர்.

ALSO READ |  டீசல் விலை 100 ரூபாயை கடந்தது, பெட்ரோல் விலையும் அதிகரிப்பு - இன்றைய (ஏப்ரல் 5-2022) நிலவரம்

 இதுதொடர்பான வழக்கு விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் அமைந்துள்ள போக்சோ நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் இன்று குற்றம்சாட்டப்பட்ட முதியவர் சுந்தர்ராஜ்-க்கு போக்சோ நீதிமன்ற நீதிபதி தனசேகரன் ஆயுள் தண்டனை வழங்கியும் மற்றும் ரூ.1000 அபராதம் விதித்தும் தீர்ப்பளித்தார். மேலும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ரூபாய் 10 லட்சம் தமிழக அரசு நஷ்ட ஈடு வழங்க உத்தரவிட்டார்.

செய்தியாளர் : செந்தில்குமார் 

top videos
    First published:

    Tags: Virudhunagar