விருதுநகர் மல்லி கிட்டங்கி ரோட்டை சேர்ந்தவர் சதீஷ். எல்ஐசி ஏஜெண்ட்டாக பணிபுரிந்து வருகிறார் தற்போது இவர் கருப்பசாமி நகர் பகுதியில் வீடு கட்டி கொண்டிருந்தார். சதீஷ் வீட்டிற்கு கல் வாங்குவதற்காக காரைக்குடிக்கு சென்றுள்ளார். வழக்கம்போல் இன்று வீட்டு வேலை நடந்து கொண்டிருந்தது. அப்போது இடி, மின்னலுடன் கன
மழை பெய்ய துவங்கியது.
இதையடுத்து கட்டிட வேலை பார்த்து கொண்டிருந்த ரோசல்பட்டியை சேர்ந்த கார்த்திக்ராஜா, முருகன், ஜக்கம்மா மற்றும் ஜெயசூர்யா உள்ளிட்ட 4 பேர் வேகமாக கட்டிடத்தின் மாடியிலிருந்து இறங்க முயற்சித்துள்ளனர். அதற்குள் மின்னல் தாக்கி 4 பேரும் பரிதாபமாக உடல் கருகி உயிரிழந்துள்ளனர்.
Also Read : கெயில் எரிவாயு குழாய் பதிக்கும் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்த விவசாயி தற்கொலை
இந்த சம்பவம் குறித்து தகவல் கிடைத்த விரைந்து வந்த தீயணைப்புத்துறையினர் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு மாவட்ட காவல்கண்காணிப்பாளர் மனோகர் நேரில் வந்து பார்வையிட்டார். இது குறித்து விருதுநகர் ஊரக காவல்நிலைய போலீசார் விசாரணை நடத்தினர்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.