Home /News /tamil-nadu /

யோகாசனத்தில் 2-வது முறையாக கின்னஸ் சாதனை.. பள்ளி மாணவி அசத்தல்.. ஆட்சியர் நேரில் சென்று பாராட்டு

யோகாசனத்தில் 2-வது முறையாக கின்னஸ் சாதனை.. பள்ளி மாணவி அசத்தல்.. ஆட்சியர் நேரில் சென்று பாராட்டு

harsha nivedha

harsha nivedha

Harsha Nivedha Guinness Record | விருதுநகரை சேர்ந்த பள்ளி மாணவி யோகாசனத்தில் 2-வது கின்னஸ் சாதனை படைத்து உள்ளார். அவரை ஆட்சியர் மேகநாதரெட்டி நேரில் பாராட்டியுள்ளார்.

விருதுநகரைச் சேர்ந்த கார்த்திக் குமார்- ஞானஜோதி தம்பதியரின் இரண்டாவது மகள் ஹர்ஷநிவேதா( வயது 15). விருதுநகரில் உள்ள தனியார் பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வருகிறார். யோகாசனத்தில் ஆர்வமுள்ள ஹர்ஷ நிவேதா 2017-ம் ஆண்டு கின்னஸ் சாதனை படைத்துள்ளார். அப்போது கவுண்டனி ஆசனத்தை 2.54 நிமிடம் செய்து அதற்கு முன்னர் இருந்த 90 வினாடிகள் சாதனையை முறியடித்து கின்னஸ் சாதனை பதிவு பெற்றுள்ளார்.
ஏற்கனவே அதே ஆண்டில் ஆசிய சாதனை பதிவு மற்றும் தேசிய சாதனை பதிவு பெற்றுள்ளார். கடந்த காமன்வெல்த் போட்டியில் யோகாசனத்தில் 10-வது இடம் பெற்றுள்ளார்.

நேற்று இரண்டாவது கின்னஸ் சாதனை பதிவிற்காக சிறப்பு அனுமதி பெற்று விருச்சிகாசனம் செய்தபடியே 17.01 வினாடியில் கணினி மூலம் கலவை செய்யப்பட்ட கியூபினை ஒருங்கிணைத்தார்.
விருதுநகர் தனியார் ஆங்கிலப்பள்ளி வளாகத்தில் நடைபெற்ற இச்சாதனை பதிவின் போது ஆட்சியர் மேகநாதரெட்டி, மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி ஞான கவுரி, மாவட்ட விளையாட்டு அலுவலர் ராஜா ஆகியோர் கலந்து கொண்டு சாதனை படைத்த மாணவி ஹர்ஷநிவேதாவுக்கு சால்வை அணிவித்து பாராட்டினர்.

''தி காஷ்மீர் ஃபைல்ஸ்'' ஒரு படம் மட்டும்தான்; அது எந்த கட்சிக்கும் தேர்தலில் உதவாது'': சிவசேனா விமர்சனம்


மாணவி ஹர்ஷ நிவேதா சாதனைக்காக தனக்கு ஊக்கமளித்த பெற்றோருக்கும் பயிற்சி அளித்த யோகாசன ஆசிரியை மற்றும் கியூப் பயிற்சியாளருக்கும் நன்றி தெரிவித்தார்.மேலும் ஒலிம்பிக் போட்டியிலும் யோகாவில் சாதனை படைக்க வாய்ப்பு கிடைக்கும் என்றும் நம்பிக்கை தெரிவித்தார்.
Published by:Lilly Mary Kamala
First published:

Tags: Guinness, Virudhunagar

அடுத்த செய்தி