முகப்பு /செய்தி /தமிழ்நாடு / சாத்தூர் பட்டாசு ஆலை விபத்து : 2 பேர் பலி

சாத்தூர் பட்டாசு ஆலை விபத்து : 2 பேர் பலி

மாதிரி படம்

மாதிரி படம்

Virudhunagar : விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உள்ள மஞ்சள் உடையப்பட்டி கிராமத்தில் பட்டாசு ஆலையில் வெடி விபத்து ஏற்பட்டது.

  • Last Updated :

விருதுநகர் மாவட்டம்,  சாத்தூர் அருகே உள்ள மஞ்சள் உடையப்பட்டி கிராமத்தில் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் சிக்கி 2 பேர் உயிரிழந்துள்ளனர். காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக கோவில்பட்டி அரசு மருத்துமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த விபத்தில், செந்தில்குமார் மற்றும் கருப்பசாமி ஆகியோர் பரிதாபமாக உயிரிழந்தனர். காயம் அடைந்த 5 பேர் சிகிச்சை பெற்று வருவதாத தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில், கோவில்பட்டியில் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அய்யம்மாள், சரஸ்வதி இருவரும் மேல் சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

top videos

    இதற்கிடையில், பலி எண்ணிக்கை 3 ஆக உயர்ந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

    First published:

    Tags: Fire accident, Firecrackers, Virudunagar