வங்கக்கடலில் உருவான மாண்டஸ் புயல் புதுச்சேரி -ஸ்ரீஹரிகோட்டா இடையே நேற்றிரவு கரையை கடந்தது. மாண்டஸ் புயலின் தாக்கம் காரணமாக சென்னை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்றிரவு பலத்த காற்றுடன் கூடிய மழை பெய்தது.
குறிப்பாக கடல் பகுதிகளில் தீவிர சூரைக்காற்றுடன் மழை பொழிந்தது. கடலோர பகுதிகளில் உள்ள குடியிருப்பு பகுதிகளில் நீர் புகுந்தது. இந்நிலையில், புயல் மழையின் போது தனது கணவனை காணவில்லை என்று சென்னை உத்தண்டி அருகே கண்ணீரும் கம்பலையுமாகத் தேடிய உருக்கமான காணொளி சமூகவலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. அந்த பெண்ணை தனது வீட்டிற்கு செல்ல முடியவில்லை, தெருவுக்குள் வெள்ள நீராக உள்ளதே என்று கவலையுடன் கூறி புலம்பினார்.
அங்கிருந்த செய்தியாளர்கள் பெண்ணிடம் ஏன் புலம்புகிறீர்கள் எனக் கேட்க, என் வீட்டிற்கு போக முடியவில்லை புருஷனை வேறு காணவில்லையே என்ன செய்கிறாரோ என்று தெரியவில்லையே என கவலையுடன் புலம்பினார். உடனே அங்கிருந்தவர்கள் கவலை பட வேண்டாம் கணவர் பத்திரமாக இருப்பார் என ஆறுதல் கூறினர். ஆனாலும் அந்த பெண் அய்யா, எங்கய்யா இருக்க என்று கூக்குரல் போட்டுக்கொண்டே தேடிக்கொண்டு போனார்.
இந்நிலையில், இந்த பெண் குறித்து காவல்துறையிடம் தகவல் தெரிவித்த நிலையில், அந்த பகுதிக்கு விரைந்த போலீசார் பெண்ணையும் அவரது கணவரையும் பத்திரமாக மீட்டு முகாமில் தங்க வைத்தனர். கொட்டும் மழையில் தனது கணவரை பாசத்துடன் மனைவி தேடும் அந்த காட்சிகள் தனியார் செய்தி தொலைக்காட்சி ஒன்றில் ஒளிப்பரப்பானது. தற்போது இந்த வீடியோ வைரலாக பரவி வருகிறது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Chennai, Cyclone, Husband Wife, Viral Video