பலத்த காற்றால் கூட்டிலிருந்து கீழே விழுந்த மைனா குஞ்சுகள்: பனைமரம் ஏறி குஞ்சுகளைப் பாதுகாப்பாக வைத்த இளைஞர்

புதுக்கோட்டையில் பனைமரத்தில் இருந்து கீழே விழுந்த மைனா குஞ்சுகளை மீண்டும் அதன் கூண்டிலேயே வைத்த இளைஞரை பலரும் பாராட்டி வருகின்றனர்

பலத்த காற்றால் கூட்டிலிருந்து கீழே விழுந்த மைனா குஞ்சுகள்: பனைமரம் ஏறி குஞ்சுகளைப் பாதுகாப்பாக வைத்த இளைஞர்
பனைமரத்தில் இருந்து கீழே விழுந்த மைனா குஞ்சுகளை மீண்டும் அதன் கூண்டிலேயே வைத்த இளைஞர்
  • Share this:
புதுக்கோட்டை மாவட்டம் ஒசுவப்பட்டி எனும் கிராமத்தில் உள்ள வயல்வெளி ஒன்றில் இருந்த பனைமரத்தில் ஒரு மைனா கூடு கட்டி குஞ்சு பொரித்தது. இந்நிலையில், இன்று அதிகப்படியாக வீசிய காற்றின் தாக்கத்தால் பனை மரத்தில் இருந்த கூட்டில் மூன்று மைனாக் குஞ்சுகள் பல அடி தூரத்தில் இருந்து கீழே விழுந்தன.

Also read: ஜனநாயகத்தைக் காக்க மக்கள் குரலெழுப்ப வேண்டும் - ராகுல் காந்தி

அப்போது அந்த வயல்வெளிக்கு வந்த ஆனந்த் என்ற இளைஞர், அந்த மைனாக் குஞ்சுகளை தன்னுடைய சட்டைப்பையில் வைத்துக்கொண்டு மரத்தின் மேலே ஏறிச் சென்று அதனுடைய கூட்டிலேயே மீண்டும் வைத்துவிட்டு வந்தார்.


ஆனந்த்.


சிலிர்க்க வைக்கும் மனிதநேயம் கொண்ட இளைஞர் ஆனந்தின் செயலை புகைப்படம் எடுத்த சரவணன் ராமசாமி என்பவர் முகநூலில் அதைப் பதிவிட்டுள்ளார். பலரும் அதைப் பாராட்டி தங்களின் முகநூல் பக்கத்தில் பகிர்ந்து வருகின்றனர்.
First published: July 26, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading