புதுச்சேரியில் இரு மீனவக் கிராமங்களிடையே மோதல்! 5 பேர் படுகாயம்; 144 உத்தரவு பிறப்பிப்பு

வீராம்பட்டினத்தை சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் ஆயுதங்களுடன் கிளம்பினர். இரு கிராம மக்களும் புதுகுப்பம் கிராமத்தில் திரண்டதால் கலவரம் வெடிக்கும் சூழல் ஏற்பட்டது.

புதுச்சேரியில் இரு மீனவக் கிராமங்களிடையே மோதல்! 5 பேர் படுகாயம்; 144 உத்தரவு பிறப்பிப்பு
புதுச்சேரி கலவரம்
  • News18
  • Last Updated: October 14, 2019, 9:47 PM IST
  • Share this:
புதுச்சேரியில் இரு கிராம மீனவர்களிடையே ஏற்பட்ட மோதலை அடுத்து போலீசார் துப்பாக்கிச் சூடு நடத்தியதால் பதற்றமான சூழல் நிலவியது. அசம்பாவிதத்தை தடுக்க 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.

புதுச்சேரியிலுள்ள வீராம்பட்டினம் மீனவ கிராமத்தினர் கடந்த 10 நாட்களுக்கு முன்பு தடை செய்யப்பட்ட சுருக்கு வலையை பயன்படுத்தி மீன்பிடித்துள்ளனர். இதற்கு நல்லவாடு கிராமத்தினர் எதிர்ப்பு தெரிவித்ததால் இருதரப்பினரிடையே மோதல் ஏற்பட்டது. அதிகாரிகள் தலையிட்டு சமாதானப்படுத்திய நிலையில், வீராம்பட்டினம் மீனவர்கள் இன்று காலை நண்டு பிடிப்பதற்காக வலை விரித்திருந்தனர்.

இதனை சுருக்கு வலை என நினைத்து நல்லவாடு கிராமத்தினர் தகராறில் ஈடுபட்டுள்ளனர். நடுக்கடலில் இருதரப்பினரும் கத்தி, சுளுக்கி உள்ளிட்ட ஆயுதங்களால் சரமாரியாக தாக்கிக் கொண்டதால் மோதல் வெடித்தது. இதனையறிந்து நல்லவாடு மீனவ மக்கள் ஆயிரக்கணக்கானோர் ஆயுதங்களுடன் வீராம்பட்டினம் நோக்கிச் சென்றனர். இதற்கு பதிலாக வீராம்பட்டினத்தை சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் ஆயுதங்களுடன் கிளம்பினர். இரு கிராம மக்களும் புதுகுப்பம் கிராமத்தில் திரண்டதால் கலவரம் வெடிக்கும் சூழல் ஏற்பட்டது.


இதையடுத்து போலீசார் 45 முறை வானை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தி எச்சரித்தனர். மேலும், கண்ணீர் புகைக் குண்டுகளை வீசி கலவரக்காரர்களை விரட்டியடுத்து நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்தக் கலவரத்தில் 5 பேர் படுகாயமடைந்தனர்.

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக புதுச்சேரி மற்றும் தமிழக போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. நல்லவாடு, வீராம்பட்டினம் கிராமங்களில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இரண்டு மீனவ கிராமத்தை சேர்ந்த 100 பேர் மீது வழக்கு பதிவு செய்ய போலீசார் திட்டமிட்டுள்ளனர்.

Also see:
First published: October 14, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்