பள்ளி வளாகங்களில் மாணவர்களுக்கு எதிரான வன்கொடுமை பல மடங்கு அதிகரிப்பு.. அதிரவைக்கும் புள்ளிவிவரம்

மாணவர்கள்

குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் அதிகரிப்பது குறித்து காவல் நிலையங்களில் பதிவு செய்யப்பட்டுள்ள வழக்குகளின் எண்ணிக்கை இதனை உறுதிப்படுத்துகின்றன..

  • Share this:
தமிழகத்தில் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் மற்றும் பாலியல் வன்கொடுமைகள் பள்ளி வளாகங்கள் மற்றும் பிற இடங்களில் கடந்த 2004ம் ஆண்டு முதல் 2019ம் ஆண்டு வரை படிப்படியாக அதிகரித்து வருவது அரசின் புள்ளி விவரங்களில் தெரிய வந்துள்ளது.

கடந்த 2004 முதல் 2019 ம் ஆண்டுவரை குழந்தைகளுக்கு எதிராக தமிழகத்தில் உள்ள பள்ளி வளாகங்களில் 166  வன்கொடுமை வழக்குகள் நடைபெற்றதாகவும்  குழந்தைகளுக்கு எதிராக பாலியல் ரீதியான குற்றங்கள் 10,750 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளது.

சென்னை கே.கே நகரில் உள்ள பத்மா சேஷாத்திரி பள்ளியில் ஆன்லைன் வகுப்பின் போது மாணவிகளிடம் ஆசிரியர் பாலியல் ரீதியாக ஆபாசமாக நடந்து கொண்டதாக எழுந்துள்ள புகார் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இதனைத் தொடர்ந்து பல்வேறு பள்ளி மாணவர்கள் தங்களுக்கு எதிராக நடைபெற்ற பாலியல் கொடுமைகளை சமூக வலைதளங்களில் பதிவு செய்து வருகின்றனர்.

பள்ளி வளாகங்கள் மற்றும் பிற இடங்களில் குழந்தைகளுக்கு எதிராக நடக்கக்கூடிய குற்றங்கள் மற்றும் பாலியல் துன்புறுத்தல் சம்பவங்கள் வாடிக்கையான ஒன்றாகவே இருந்து வருகின்றது..
குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் அதிகரிப்பது குறித்து காவல் நிலையங்களில் பதிவு செய்யப்பட்டுள்ள வழக்குகளின் எண்ணிக்கை இதனை உறுதிப்படுத்துகின்றன.

Also Read : அடுத்தடுத்து 40 மாணவிகள் குற்றச்சாட்டு... பள்ளி நிர்வாகத்திற்கு தெரிந்தே நடந்ததா?

மேலும் ஆண்டுதோறும் பள்ளி வளாகங்கள் மற்றும் பிற இடங்களில் மாணவர்களுக்கு எதிரான வன்கொடுமை மற்றும் பாலியல் குற்றங்கள் புள்ளி விவரம் பின்வருமாறு

பள்ளி வளாகங்களில் மாணவர்களுக்கு எதிரான வன்கொடுமை

2006-2
2010-3
2013-16
2018-25
2019-35

தமிழகத்தில் குழந்தைகளுக்கு எதிராக நடைபெற்ற பாலியல் குற்றங்கள் தொடர்பாக பதிவு செய்யப்பட்ட வழக்குகள்

2004-166
2008-187
2014-1055
2018-2052
2019-2410

இந்த புள்ளிவிவரங்கள் மூலம் பள்ளி வளாகங்கள் மற்றும் பிற இடங்களில் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் ரீதியாகவும் இதர முறைகளிலும் வன்கொடுமை நடப்பது ஆண்டுதோறும் அதிகரித்து வருவது தெரியவந்துள்ளது..
Published by:Vijay R
First published: