கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் கொரோனா தொற்று காரணமாக அறுவை சிகிச்சை நிபுணர் சைமன் ஹெர்குல்ஸ் உயிரிழந்தார். சென்னையில் தனியார் மருத்துவமனையில் மூத்த மருத்துவராக பணிபுரிந்து வந்த அவருக்கு நோயாளிக்கு சிகிச்சை அளிக்கும் போது தொற்று ஏற்பட்டு அதன் காரணமாக உடல் நிலை மோசமாகி உயிரிழந்தார்.
கொரோனா குறித்த அச்சம் சந்தேகம் அதிகம் நிலவி வந்த வேளையில் அவரது உடலை அடக்கம் செய்ய பொதுமக்கள் அனுமதிக்காமல் சாலை மறியலில் ஈடுபட்டனர். அறிவியல் பூர்வமாக உடலை அடக்கம் செய்வதில் ஆபத்து இல்லை என்றாலும் பொதுமக்கள் கொரோனா பரவக் கூடும் என கருதி எதிர்ப்பு தெரிவித்தனர்.
எனவே இரவோடு இரவாக மற்றொரு மயானத்தில் குடும்ப உறுப்பினர்கள் யாரும் இல்லாமல் அவரது நண்பரே அவசர அவசரமாக அடக்கம் செய்யும் அவல நிலை நேர்ந்தது.
இந்த சம்பவம் பெரும் சர்ச்சையாகி போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது வழக்கு பதியப்பட்டது. உயிரை காப்பாற்றும் மருத்துவர்களுக்கு, அதுவும் தொற்று ஏற்படும் அபாயத்தில் பணிபுரியும் மருத்துவர்கள் உயிரிழக்க நேரிட்டால் அவர்களது உடல்களை அடக்கம் செய்ய எதிர்ப்பு தெரிவித்தது மருத்துவர்கள் சமூகத்தை ஆதங்கத்துக்கு உள்ளாக்கியது.
கடந்த ஓராண்டுக்கு மேலான காலக்கட்டத்தில் கொரோனாவால் பெரும்பாலான குடும்பங்கள் உயிரிழப்பை சந்தித்திருக்கும் வேளையில், தொற்று குறித்த அபத்தமான பயம் சற்று விலகியுள்ளது. எனவே இது போன்ற சம்பவங்கள் பெரும்பாலான நேரங்களில் அதன் பின் தமிழ்நாட்டில் நிகழவில்லை.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில்
நியூஸ்18 தமிழ் இணையதளத்தை
இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்..
செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
மேலும் படிக்க... ஜாக்கி'கள் மூலம் தரையில் இருந்து 4 அடி உயர்த்தப்பட்ட 3 மாடி கட்டடம்..
இந்நிலையில் ஜூலை 1ம் தேதி மருத்துவர்கள் தினத்தில் மருத்துவர் சைமன் போன்று கொரோனா பெருந்தொற்றுக்கு பலியாகியிருக்கும் மருத்துவர்களின் சேவையை நினைவுகூர்கிறார் மருத்துவர் சைமனின் மகள் ஷைமி ஹெர்குல்ஸ். தானே மருத்துவரான ஷைமி , நாடெங்கும் பல இடங்களில் மருத்துவர்கள் மீது நடக்கும் வன்முறைகளை தவிர்க்கப்பட வேண்டும் என்கிறார்.
மேலும்" என் தந்தையை போன்று மருத்துவர்கள் அனைவரும் தங்களிடம் வரும் நோயாளிகளின் உயிர்களை காப்பாற்றவே போராடுகின்றனர். அதற்காகதான் சேவை புரிகின்றனர். அவர்களின் பணியை மக்கள் புரிந்து கொண்டு ஒத்துழைப்பு தர வேண்டும். அவர்கள் மீது நடத்தப்படும் வன்முறை தவிர்க்கப்பட வேண்டும்" என்கிறார்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.