விதிமீறல் கட்டிடங்கள் வரன்முறை - 12 மாத கால அவகாசம் நீட்டிப்பு

2021-ம் ஆண்டு ஜூன் 21-ம் தேதி வரையில் விதிமீறல் கட்டிடங்களை வரன்முறைப்படுத்துவதற்கான காலக்கெடுவை நீட்டித்து தமிழக வீட்டுவசதித்துறை அரசாணை பிறப்பித்துள்ளது.

விதிமீறல் கட்டிடங்கள் வரன்முறை - 12 மாத கால அவகாசம் நீட்டிப்பு
கோப்புப் படம்
  • Share this:
தமிழகத்தில் விதிகளை மீறி கடந்த 2007-ம் ஆண்டுக்கு முன் கட்டப்பட்ட கட்டிடங்களைக் கண்காணித்து ஒழுங்குபடுத்த, நீதிபதி ராஜேஷ்வரன் தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டது.  அக்குழுவின் பரிந்துரைகள்படி புதிய விதிமுறைகளை தமிழக அரசு வகுத்தது.

இதன்படி, 2007-ம் ஆண்டுக்கு முன் விதி மீறி கட்டப்பட்ட கட்டிடங்களை வரன்முறைப்படுத்தி அனுமதி தரப்படும். வரன்முறைக் கட்டணத்தை கணக்கிட்டு, ஆறு மாதத்துக்குள் இணையதளம் மூலம் செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும் என்று கடந்த 2017-ம் ஆண்டு  ஜூன் மாதம் அறிவித்தது.

அப்போது அளிக்கப்பட்ட 6 மாத அவகாசம், அந்த ஆண்டு டிசம்பர் மாதம் முடிவடைந்தது. இதையடுத்து,  கடந்த 2018-ம் ஆண்டு மார்ச் வரையும் அதன் பின் ஜூன் மாதம் வரை, அதன்பின், டிசம்பர் வரை என 3 முறை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டது.


இறுதியாக 2018-ம் ஆண்டு டிச.21-ம் தேதி காலக்கெடு முடிந்தது. இதையடுத்து, கடந்த 2019-ம் ஆண்டு ஜூன் 21-ம் தேதி வரையும் அதன்பின், டிசம்பர் 20-ம் தேதி வரையும், தொடர்ந்து இந்தாண்டு ஜூன் 21-ம் தேதி வரையும் நீட்டித்தது.

மேலும் படிக்க...தமிழகத்தில் உள் மாவட்டங்களில் அதிகரிக்கும் கொரோனா தொற்று

தற்போது 7 வது முறையாக ஓராண்டுக்கு அதாவது அடுத்தாண்டு 2021-ம் ஆண்டு ஜூன் 21-ம் தேதி வரையில் விதிமீறல் கட்டிடங்களை வரன்முறைப்படுத்துவதற்கான காலக்கெடுவை நீட்டித்து தமிழக வீட்டுவசதித்துறை அரசாணை பிறப்பித்துள்ளது.
First published: June 23, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading