Home /News /tamil-nadu /

விநாயகர் சிலை ஊர்வலம்.. நிபந்தனைகளுடன் அனுமதி - நீதிமன்றம் உத்தரவு

விநாயகர் சிலை ஊர்வலம்.. நிபந்தனைகளுடன் அனுமதி - நீதிமன்றம் உத்தரவு

விநாயகர் சதுர்த்தி விழா

விநாயகர் சதுர்த்தி விழா

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு விநாயகர்  சிலைகள் வைக்கவும், விநாயகர் சிலை ஊர்வலத்திற்கும்   நிபந்தனைகளுடன் அனுமதி வழங்க உயர்நீதிமன்றம் மதுரை கிளை உத்தரவு.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Madurai, India
சிவகங்கையை சேர்ந்த சந்திரசேகரன் என்பவர் உயர்நீதிமன்றம் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில், சிவகங்கை மாவட்டம் பீரான்பட்டி ஊராட்சியில் உள்ள அருள்மிகு பாலதண்டாயுதபானி திருக்கோயில் அருகே விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு  விநாயகர் சிலை வைப்பதற்கும்,  வைக்கப்பட்ட சிலைகளை ஊர்வலமாக கொண்டு செல்வதற்கும் அனுமதி வழங்க கோரி மனு தாக்கல் செய்திருந்தார்.

இதேபோன்று  மதுரை , தேனி, விருதுநகர்  உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் விநாயகர் சிலை ஊர்வலத்திற்கு அனுமதி கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுக்களும் தாக்கல் செய்யப்பட்டன.இந்த மனுக்கள் நீதிபதி முரளி சங்கர் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கின் தன்மையை பொறுத்து, தொடர்புடைய காவல் துறை அதிகாரிகள் கீழ்கண்ட நிபந்தனைகளைகளுடன் அனுமதி வழங்க உத்தரவிட்டார்.

நிபந்தனைகளின் விவரம் வருமாறு- 

  • விநாயகர் சிலை ஊர்வலத்தின் போது  பங்கேற்பாளர்கள் எவராலும் எந்தவிதமான ஆபாச நடனமோ , பேச்சோ இருக்கக்கூடாது.

  • விநாயகர் சிலை  ஊர்வலத்தின் போது எந்த ஒரு அரசியல் கட்சி அல்லது மதம், சமூகம் அல்லது சாதியை குறிப்பிட்டு  நடனம் அல்லது பாடல்கள் எதுவும் இசைக்கக்கூடாது.

  •  விநாயகர் சிலை  ஊர்வலத்தின் போது எந்த அரசியல் கட்சிக்கும் அல்லது மதத் தலைவருக்கும் ஆதரவாக ஃப்ளெக்ஸ் போர்டுகள் அமைக்கக் கூடாது

  •  விநாயகர் சிலை  ஊர்வலத்தின் போது மதம் அல்லது மத நல்லிணக்கத்தைப் பாதிக்கும் வகையில் இருக்க கூடாது . விநாயகர் சதுர்த்தி  ஊர்வலத்தின் போது  பங்கேற்பவர்கள் எந்தவிதமான போதை  பொருட்களையோ மதுபானங்களையோ உட்கொள்ளக்கூடாது.


விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தில் ஏதேனும் அசம்பாவிதம் நடந்தால்  ,  மனுதாரர் மற்றும் விழா ஏற்பாட்டாளர்கள்  பொறுப்பாவார்கள்
விதிக்கப்பட்ட நிபந்தனைகளில் ஏதேனும் ஒன்றை மீறினால்,  சட்டப்படி தேவையான நடவடிக்கை எடுத்து, அத்தகைய திருவிழாவை நிறுத்துவதற்கு, சம்பந்தப்பட்ட காவல்துறை அதிகாரிக்கு சுதந்திரம் உண்டு இந்த நிபந்தனைகளுடன் உரிய அனுமதி வழங்க நீதிபதி உத்தரவிட்டார்.
Published by:Ramprasath H
First published:

Tags: Breaking News, Ganesh Chaturti, Vinayagar Chathurthi | விநாயகர் சதுர்த்தி

அடுத்த செய்தி