தமிழக அரசு வெளியிட்டுள்ள பொது அறிவிப்பில் விநாயகர் சதுர்த்தியை செப்டம்பர் 17ஆம் தேதி என குறிப்பிடப்பட்டுள்ளது. இதனை திங்கட்கிழமை செப்டம்பர் 18ஆம் தேதி என்று உடனடியாக மாற்றி அறிவிக்க வேண்டும் என தமிழ் நாடு விஸ்வ ஹிந்து பரிஷத் தலைவர் ஆர்ஆர் கேபால்ஜி கோரிக்க வைத்துள்ளார்.
இதுகுறித்து, அவர் விடுத்துள்ள அறிக்கையில், “ 2023ம் ஆண்டுக்கான காலண்டர்கள் வெளியாகி வருகின்றன. அதில் பஞ்சாங்கம் அடிப்படையில், செப்டம்பர் 18ம் தேதி, திங்கட்கிழமை, விநாயகர் சதுர்த்தி என்று கணிக்கப்பட்டுள்ளது.
ஆனால், தமிழக அரசின் பொது விடுமுறை பட்டியலில், விநாயகர் சதுர்த்தி செப்டம்பர் 17ம் தேதி ஞாயிற்றுக்கிழமை என்று அறிவிக்கப்பட்டுள்ளது அதிர்ச்சி அளிக்கிறது.
விநாயகர் சதுர்த்தி என்பது, இந்துக்களின் முழுமுதற் கடவுளான விநாயகர் பெருமாளின் அவதார தினம் ஆகும். அது, ஆவணி மாத அமாவாசையை தொடர்ந்து வரக்கூடிய வளர்பிறை சதுர்த்தி தினமாகும். அதன்படி, 2023ம் ஆண்டு ஆவணி அமாவாசையை தொடர்ந்து வரக்கூடிய சதுர்த்தி செப்டம்பர் 18ம் தேதி காலை 11:38 மணிக்கு தொடங்கி மறுநாள் காலை 11:50 வரை உள்ளது.
இந்துக்களின் மரபு படி, இரவு நேரத்துக்கு பின்பு வரக்கூடிய மிச்ச நேரத்தை கணக்கில் கொள்வதில்லை. அப்படி பார்த்தால், செப்., 18ம் தேதி தான் விநாயகர் சதுர்த்தி விரதம் அனுஷ்டிக்கப்பட வேண்டும். அப்படித்தான் இந்து முறைப்படியான காலண்டர்களிலும், பஞ்சாங்கங்களிலும், செப்., 18ம் தேதி விநாயகர் சதுர்த்தி என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இதை கருத்தில் எடுத்துக் கொள்ளாமல், விநாயகர் சதுர்த்தி, செப்டம்பர் 17 என்று, தமிழக அரசு தன்னிச்சையாக அறிவித்துள்ளது, கண்டனத்திற்கு உரியது. இது, இந்துக்களின் நம்பிக்கையை அவமதிக்கும் செயல்.
Also see... வெற்றிதரும் வெள்ளேருக்கு விநாயகர் வழிபாடு!
அதனடிப்படையில், தமிழக அரசு வெளியிட்டுள்ள பொது விடுமுறை அறிவிப்பில், விநாயகர் சநுர்த்தியை, செப்டம்பர் 18ம் தேதி, திங்கட்கிழமை என்று உடனடியாக மாற்றி அறிவிக்க வேண்டும்” என்று அந்த அறிகையில் கோரிக்கை விடுத்துள்ளார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Tamil Nadu government, Vinayagar Chathurthi | விநாயகர் சதுர்த்தி