விநாயகர் சதுர்த்தி விழாவை எப்படி நடத்துவது? இந்து மத தலைவர்களுடன் தமிழக அரசு ஆலோசனை

ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாட்டம் குறித்து தமிழக அரசு ஆலோசனை நடத்த உள்ளது.

விநாயகர் சதுர்த்தி விழாவை எப்படி நடத்துவது? இந்து மத தலைவர்களுடன் தமிழக அரசு ஆலோசனை
விநாயகர் சிலை
  • Share this:
விநாயகர் சதுர்த்தி, வரும் 22 ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளது. கடந்த ஆண்டுகளை போல் அல்லாமல், இந்தாண்டு, கொரொனா தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாட்டங்களை நடத்த முடியாத நிலை உள்ளது.

ஆகஸ்ட் 31 வரை ஊரடங்கு நீட்டித்திருப்பதாலும், பெரிய கோயில்களை பொதுமக்கள் தரிசனத்திற்கு திறக்க அனுமதிக்கவில்லையென்பதாலும், பிரமாண்ட சிலைகள் அமைப்பது, அதை ஊர்வலமாக கொண்டு சென்று கடலில் கரைப்பது என பல்வேறு நடவடிக்கைகள் இந்தாண்டு நடத்தமுடியாது.

இந்தநிலையில், இந்து மத தலைவர்களை அழைத்து பேச தமிழக அரசு முடிவு செய்துள்ளது.


அதன்படி, இன்று பிற்பகலில், சென்னை தலைமை செயலகத்தில் ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது. அதில் விநாயகர் சதுர்த்தி கொண்ட்டாட்டம் தொடர்பாக இந்து மத தலைவர்களுடன் தலைமை செயலாளர் சண்முகம் ஆலோசிக்க உள்ளார்.
First published: August 5, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading