Home /News /tamil-nadu /

’அநாவசியமாக ஏன் வாக்கு வங்கியில் மண்ணை அள்ளிப் போட்டுக்கொள்கிறீர்கள்...?’ முதல்வருக்கு இல.கணேசன் கேள்வி

’அநாவசியமாக ஏன் வாக்கு வங்கியில் மண்ணை அள்ளிப் போட்டுக்கொள்கிறீர்கள்...?’ முதல்வருக்கு இல.கணேசன் கேள்வி

பாஜக அலுவலகத்தில் வழிபாடு செய்யும் அக்கட்சியின் மூத்த தலைவர் இல.கணேசன்

பாஜக அலுவலகத்தில் வழிபாடு செய்யும் அக்கட்சியின் மூத்த தலைவர் இல.கணேசன்

விநாயகர் ஊர்வலம் குறித்து கருத்து தெரிவித்துள்ள பாஜக மூத்த தலைவர் இல.கணேசன், அநாவசியமாக ஏன் வாக்கு வங்கியில் மண்ணை அள்ளிப் போட்டுக்கொள்கிறீர்கள் என முதலமைச்சருக்கு கேள்வி எழுப்பியுள்ளார்.

குடிகாரர்களே கட்டுப்பாட்டோடு மதுக்கடைக்கு சென்று வருவார்கள் என நினைக்கும் அரசு பக்தர்கள் கட்டுப்பாட்டை மீறிவார்கள் என ஏன் நினைக்கிறது என புரியவில்லை எனக் கூறியுள்ள பாஜக மூத்த தலைவர் இல.கணேசன், இந்த விஷயத்தில் நான் தமிழக அரசுக்கு எதிரானவன் என்றார்.

மேலும் கூறுகையில், இந்து முன்னணி வெற்றிகரமாக 40 ஆண்டுகளாக விநாயகர் சதுர்த்தி விழாவை பொது நிகழ்ச்சியாக நடத்தி வருகிறது. குறிப்பாக விநாயகர் சதுர்த்தியில் கொண்டாட்டத்தில் ஈடுபடுபவர்களைப் பார்த்தால்... (பொதுவாக நான் பிரித்துப் பார்ப்பதில்லை நீங்கள் கேட்பதால் சொல்கிறேன்) பெரும்பாலும் சமுதாயத்தில் மிகவும் பின்தங்கிய பிரிவினரே அதிகளவில் உற்சாகமாகக் கொண்டாடுகிறார்கள்.

விநாயகர் சதுர்த்தியின்போது சிலை வழிபாட்டிற்கு ஏதேனும் கட்டுப்பாடு விதியுங்கள். அதை நாங்கள் பின்பற்றுகிறோம். என்ன கட்டுப்பாடு இருந்தாலும் சரி அதைப் பின்பற்றுகிறோம். ஆனால் விநாயகரே வைக்கக்கூடாது என்று சொல்வது சரியல்ல என்பது இந்து முன்னணியின் வாதம்.

Also read: ஐந்துக்கும் குறைவானவர்கள் கட்டுப்பாடுகளுடன் விநாயகர் சிலையை கரைக்க எடுத்துச் செல்ல தடை இல்லை - நீதிமன்றத்தில் அரசு தகவல்

என்னைப் பொறுத்தவரை சில கட்டுப்பாடுகளைக் கொண்டு வாருங்கள் அதை இந்து முன்னணி பின்பற்றும். விநாயகர் சதுர்த்திக்கு இன்னும் நாள் இருக்கிறது. முதலமைச்சருக்கு என்னுடைய தனிப்பட்ட வேண்டுகோள் தேர்தலுக்கும் விநாயகர் சக்திக்கும் சம்பந்தமில்லை. ஆனால் விநாயகரை வழிபடக் கூடிய எவருமே விநாயகருக்கு எதிராக இருக்கக் கூடிய திராவிட முன்னேற்றக் கழகத்துக்கு ஆதரவாக வாக்களிக்க போவதில்லை.

ஆனால் அநாவசியமாக ஏன் தன் வாக்கு வங்கியில் மண்ணை அள்ளிப் போட்டுக் கொள்கிறீர்கள் என்பதுதான் முதலமைச்சர்கள் பார்த்து நான் கேட்க கூடிய கேள்வி என்றும் அவர் கூறியுள்ளார்
Published by:Rizwan
First published:

Tags: Ila Ganesan, Vinayagar Chathurthi | விநாயகர் சதுர்த்தி

அடுத்த செய்தி