திருச்சி மலைக்கோட்டையில் பக்தர்களின்றி விநாயகர் சதுர்த்தி : 60 கிலோ கொழுக்கட்டை படையல்

திருச்சி மலைக்கோட்டை

பக்தர்களும் கோயிலுக்கு வெளியில் நின்று வணங்கியபடி ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.

  • Share this:
கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக விநாயகர் சதுர்த்தியான இன்று திருச்சி மலைக்கோட்டையில் பக்தர்களுக்கு அனுமதியில்லாமல் விநாயகருக்கு 60, கிலோ கொழுக்கட்டை படைக்கப்பட்டது.

விநாயகர் சதுர்த்தியான இன்று  கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக திருச்சி மலைக்கோட்டை மாணிக்க விநாயகர் &  உச்சிப்பிள்ளையார்  கோயிலில்  பக்தர்களுக்கு அனுமதியில்லை. ஆனால், வழக்கமான தினசரி பூஜைகள் தடையின்றி நடைபெற்று வருகின்றன என்று கோயில் உதவி ஆணையர் விஜயராணி தெரிவித்துள்ளார்.

சிறப்பு பூஜைகளுக்குப் பிறகு காலை 9 மணிக்கு மேல் 30 கிலோ எடையுள்ள கொழுக்கட்டையை மங்கள  வாத்தியம் முழங்க, தாயுமானவர் சன்னதியில் இருந்து தொட்டிலில் அடியார்கள் சுமந்து சென்று, உச்சிப்பிள்ளையாருக்கு படைத்தனர். தொடர்ந்து அடிவாரத்தில்  உள்ள மாணிக்க விநாயகருக்கும் 30 கிலோ எடையுள்ள கொழுக்கட்டை படைக்கப்பட்டது. அரிசி மாவு, தேன், தினை மாவு, நெய் உள்ளிட்டவற்க் கொண்டு கொழுக்கட்டை படைக்கப்பட்டது.

வழக்கமாக மலைக்கோட்டையில் மாணிக்க விநாயகர், உச்சிப்பிள்ளையாருக்கு  தலா 75 கிலோ என மொத்தம் 150 கிலோவில் கொழுக்கட்டை படைக்கப்பட்டு, பக்தர்களுக்கு விநியோகம் செய்யப்படும். கொரோனா பரவல் தடுப்பு கட்டுப்பாடுகளால், பக்தர்களுக்கும் அனுமதியில்லை என்பதால் தலா 30 கிலோ கொழுக்கட்டை  படைக்கப்பட்டுள்ளது.

கோயில் உதவி ஆணையர் விஜயராணி உள்ளிட்ட அலுவலர்கள், சிவாச்சாரியார்கள், வாத்திய கலைஞர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டதால், பக்தர்களால் நிரம்பி காணப்படும் மலைக்கோட்டை கோயில் வெறிச்சோடி காணப்படுகிறது. பக்தர்களும் கோயில் வெளியில் நின்று வணங்கியபடி ஏமாற்றத்துடன் சென்றனர்.

மேலும், திருச்சி மாநகரில் அரசு வழிகாட்டுதல் படி பொது இடங்களில் விநாயகர் சிலைகள் வைக்க அனுமதியில்லை. வீடுகளில் வழிபட அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஆனாலும் 50க்கும் மேற்பட்ட இடங்களில் போலீசார் கண்காணிப்பு. 1,300 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். கொரோனாவால் இந்த ஆண்டும் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு சிலைகள், பூஜை பொருட்கள் விற்பனைக் கடைகளும் குறைவு, விற்பனையும் குறைவு.

திருச்சி மலைக்கோட்டை


Must Read : விநாயகர் சதுர்த்தி : போயஸ் கார்டன் ஜெய விநாயகர் கோயிலில் சசிகலா வழிபாடு

குறிப்பாக, 1- 2 அடி உயரமுள்ள வண்ணம் பூசாத களிமண் சிலைகள்  ரூ. 30 - 100 வரைக்கும் வண்ணம் பூசிய சிலைகள் ரூ. 100 - 500 வரை விற்பனை செய்யப்படுகிறது. அருகம்புல், எருக்கம் பூ மாலைகள் விற்பனை செய்யப்பட்டன. பூ, பழங்கள் விலை கடுமையாக உயர்ந்துள்ளன.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Published by:Suresh V
First published: