பாமக - பாஜக இணைப்புக்கு அழுத்தம்... ரவிக்குமார் எம்.பி.யின் கணிப்பு

பாமக - பாஜக இணைப்புக்கு அழுத்தம்... ரவிக்குமார் எம்.பி.யின் கணிப்பு

எம்.பி ரவிக்குமார்

தமிழக அரசியலில் தேர்தலுக்குப் பிறகான அரசியல் காட்சிகள் எப்படி இருக்கும் என்று கணித்துள்ளார் எம்.பி.ரவிக்குமார்.

 • Share this:
  தமிழத்தில் நாளை சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற இருக்கிறது. திமுக, அதிமுக, அமமுக, மக்கள் நீதி மய்யம், நாம் தமிழர் கட்சி என ஐந்துமுனை போட்டி நிலவும் சூழ்நிலையில் ஆட்சியை பிடித்து முதல்வர் அரியணையில் அமரப்போவது யார் என்ற எதிர்பார்ப்பு அனைவரது மத்தியிலும் எழுந்துள்ளது.

  இந்நிலையில் தேர்தலுக்குப் பிறகு அரசியலில் என்னென்ன காட்சிகள் அரங்கேறும் என்ற தனது கணிப்பை வெளிப்படுத்தியுள்ளார் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிக்குமார். இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பதிவில் கூறியுள்ளதாவது, “தேர்தல் முடிவுகள் வெளியாகி திமுக ஆட்சி அமைந்தபிறகு பின்வரும் காட்சிகள் அரங்கேறக்கூடும்.

  1.கமல் மீண்டும் திரைத்துறையில் கவனம் செலுத்தக் கிளம்பிவிடுவார். மநீம வில் தற்காலிக தஞ்சம் புகுந்த சிலர் பாஜகவுக்கு செல்வார்கள்.

  2. பாமகவை பாஜகவில் இணைக்கும்படி டெல்லியிலிருந்து அழுத்தம் வருவதாக செய்திகள் வெளியாகும்.

  3. இபிஎஸ் - ஓபிஎஸ் பிரிவார்கள். எடப்பாடியின் பிடியிலிருந்து அதிமுக விடுபட்டு மேலும் வகுப்புவாத அரசியலை நோக்கி நகரும்

  4. தமிழகக் கருத்தியல் களம் சமூகநீதியா? சனாதனமா?எனத் தெளிவாக அணிபிரியும்.  தேர்தலுக்குப் பிறகுதான் நமக்கு வேலை அதிகமாக இருக்கிறது. தோழர்களே சனாதனத்துக்கு எதிரான கருத்தியல் படைக்கலன்களைத் தயார்படுத்துங்கள். கடந்த ஐந்து ஆண்டுகளாகப் பின்னப்பட்ட வகுப்புவாத வலைப்பின்னலை அடையாளங்கண்டு அறுத்தெறிவதே நமது முதன்மையான பணியாக இருக்கட்டும்” இவ்வாறு ரவிக்குமார் எம்.பி கூறியுள்ளார்.
  Published by:Sheik Hanifah
  First published: