உயிரிழந்த தந்தையின் கையால் தொட்ட தாலியை மணப்பெண்ணுக்கு கட்டிய மகன் - விழுப்புரத்தில் ஒரு நெகிழ்ச்சி திருமணம்

news18
Updated: August 10, 2019, 11:18 AM IST
உயிரிழந்த தந்தையின் கையால் தொட்ட தாலியை மணப்பெண்ணுக்கு கட்டிய மகன் - விழுப்புரத்தில் ஒரு நெகிழ்ச்சி திருமணம்
உயிரிழந்த தந்தை முன் திருமணம் செய்து கொண்ட மகன்
news18
Updated: August 10, 2019, 11:18 AM IST
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே உயிரிழந்த தந்தையின் கையால் தாலி எடுத்து மகன் திருமணம் செய்துகொண்ட நெகிழ்ச்சி சம்பவம் நடந்துள்ளது.

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகிலுள்ள சிங்கனூர் கிராமத்தை  சேர்ந்தவர் தெய்வமணி (50) இவரது மகன் அலெக்சாண்டர்(29). இவருக்கும் உடன் வேலை செய்யும் மயிலம் அருகிலுள்ள கொணமங்கலம் கிராமத்தை சேர்ந்த பாலசுந்தரம் மகள் ஜெகதீஸ்வரிக்கும்(24) அடுத்த மாதம் இரண்டாம் தேதி திருமணம் செய்ய நிச்சயிக்கப்படிருந்தது.

திருமணத்திற்கு அழைப்பிதழ் அச்சடித்து இருவீட்டாரும் உறவினர்களுக்கு வழங்கி வந்த நிலையில். இந்நிலையில் அலெக்சாண்டரின் தந்தை தெய்வமணிக்கு உடல்நலக்குறைவு காரணமாக நேற்று மதியம் உயிரிழந்தார். இதனால் குடும்பத்தினர் வேதனையில் ஆழ்ந்தனர். பெற்றோரின் முன்னிலையில் தான் திருமணம் நடக்க வேண்டும் என நினைத்த அலெக்சாண்டர் இது குறித்து பெண் வீட்டாருக்கு தகவல் தெரிவித்தார்.




பெண் வீட்டாரும் திருமணத்திற்கு சம்மதம் தெரிவித்து ஜெகதீஸ்வரியை சிங்கனூர் கிராமத்திற்கு அழைத்து வந்தனர். அங்கு உயிரிழந்த தெய்வணிக்கு புதிய ஆடைகள் உடுத்தி கட்டிலில் அமர வைத்தனர் தெய்வமணி கையால் தொட்ட மாங்கல்யத்தை எடுத்து அலெக்சாண்டர் ஜெகதீஸ்வரி கழுத்தில் தாலி கட்டி திருமணம் செய்துக்கொண்டார்.

இந்த நிகழ்வு உறவினர்கள் மத்தியில் நெகிழ்சியை ஏற்படுத்தியது. உயிரிழந்த தந்தையின் முன் மகன் திருமணம் செய்துக்கொண்ட சம்பவம் பார்ப்பவகளை கண்கலங்க செய்தது.

Loading...

First published: August 10, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...