• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • விழுப்புரம்: பாஜக வேட்பாளர் அறிமுகக் கூட்டத்தை புறக்கணித்த பாமக

விழுப்புரம்: பாஜக வேட்பாளர் அறிமுகக் கூட்டத்தை புறக்கணித்த பாமக

ராமதாஸ்

ராமதாஸ்

பாஜக வேட்பாளர் அறிமுகக் கூட்டத்தை பாமக புறக்கணித்ததை அடுத்து அக்கட்சியின் தலைமையுடன் பேசி சுமூக தீர்வு காணப்படும் என்று சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் தெரிவித்துள்ளார்.

  • Share this:
    விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூர் சட்டமன்ற தொகுதி அதிமுக கூட்டணியில் பாஜக சார்பில் அக்கட்சியின் மாவட்ட தலைவர் விஏடி.கலிவரதன் நிறுத்தப்பட்டுள்ளார். இந்த நிலையில் நேற்று மாலை திருக்கோவிலூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் வேட்பாளர் அறிமுக கூட்டம் அமைச்சர் சிவி.சண்முகம் தலைமையில் நடந்தது. இந்த கூட்டத்தை பாமக-வினர் புறக்கணித்ததால் கூட்டணி கட்சியினரிடையே அதிருப்தி ஏற்பட்டது.

    பாஜக வேட்பாளராக அறிவிக்கபப்ட்டுள்ள வி.ஏ.டி.கலிவரதன் பாமக-வில் பல்வேறு பொறுப்புகளில் இருந்து வந்ததுடன், 2006-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் அப்போதைய முகையூர் தொகுதியில் திமுக கூட்டணியில் பாமக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். பாமக தலைமையுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பாமகவில் இருந்து விலகி திமுகவிலும் பின்னர் பாஜகவிற்கும்மாறினார்.

    இரண்டு வருடங்களாக பாஜகவில் இருந்து மாவட்ட தலைவர் பதவியை பெற்றதுடன் அதிமுக கூட்டணியில் பாஜக வேட்பளராகவும் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில் கூட்டணி கட்சியான பாமக தலைமையை மரியாதை நிமித்தமாக சந்திக்க சென்றபோது அங்கு அவருக்கு அனுமதி மறுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

    அதனைத்தொடர்ந்து திருகோயிலூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பாமக முக்கிய நிர்வாகிகளை சந்தித்தபோது கட்சி தலைமை கூறினால் மட்டுமே ஒத்துழைப்பு அளிப்போம் என்று திட்டவட்டமாக கூறியுள்ளனர். இதன் எதிரொலியாக நேற்று நடந்த வேட்பாளர் அறிமுக கூட்டத்தில் ஒட்டு மொத்த பாமக நிர்வாகிகளும் கூட்டத்தை புறக்கணித்தனர். இதனால் அதிமுக மற்றும் பாஜகவினர் அதிர்ச்சியடைந்தனர்

    கூட்டத்திற்கு வந்த அமைச்சர் சிவி.சண்முகம், பாமக நிர்வாகிகள் புறக்கணிப்பு செய்ததை அறிந்து விரைவில் பாமக தலைமையுடன் பேச்சுவார்த்தை நடத்தி சுமூக தீர்வு காணப்படும் எனக்கூறினார். மேலும் திமுக வேட்பாளர் பொன்முடியை வீழ்த்த கூட்டணி கட்சியினர் கடுமையாக உழைக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Sheik Hanifah
    First published: