விழுப்புரம் மக்களவைத் தொகுதி

16-வது மக்களவைத் தேர்தலில் 2.26% வாக்குகள் அதிகரித்து 76.84% வாக்குகள் என பதிவாகி இருந்தன.

Web Desk | news18
Updated: March 15, 2019, 10:56 AM IST
விழுப்புரம் மக்களவைத் தொகுதி
விழுப்புரம்
Web Desk | news18
Updated: March 15, 2019, 10:56 AM IST
விவசாய மக்கள் அதிகம் வாழும் மக்களவைத் தொகுதியாகவும் தமிழ்நாட்டின் முதல் பெரிய மாவட்டமாகவும் விழுப்புரம் விளங்குகிறது.

2008-ம் ஆண்டு நடைபெற்ற தொகுதி மறுசீரமைப்பின் போது, திண்டிவனம் மக்களவை தொகுதி நீக்கப்பட்டு, விழுப்புரம் மக்களவைத் தொகுதி உருவாக்கப்பட்டது. புதிதாக உருவாக்கப்பட்ட விழுப்புரம் மக்களவைத் தொகுதியில் நடைபெற்ற இரு மக்களவைத் தேர்தல்களிலும் அ.தி.மு.க கட்சியே வெற்றி பெற்று விழுப்புரம் தொகுதியை தன் வசம் வைத்திருக்கிறது.

16-வது மக்களவைத் தேர்தலில் அ.தி.மு.க வேட்பாளர் எஸ். ராஜேந்திரன் 4,28,704 வாக்குகளைப் பெற்று வெற்றி வாகை சூடினார். அவரை எதிர்த்துப் போட்டியிட்ட தி.மு.க-வைச் சேர்ந்த முத்தையன் 2,89,337 வாக்குகளைப் பெற்று தோல்வியைத் தழுவினார்.


தே.மு.தி.க சார்பில் போட்டியிட்ட கே. உமா சங்கர் 2,09,663 வாக்குகளைப் பெற்று இந்தத் தொகுதியிலும் தி.மு.க-வின் வெற்றிக்குத் தடையாக மாறினார். காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட ராணி 21,461 வாக்குகளைப் பெற்று படுதோல்வியை அக்கட்சிக்குப் பரிசாக வழங்கினார்.

2009-ம் ஆண்டு நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் 74.58% வாக்குகள் பதிவான நிலையில், 2014-ம் ஆண்டு நடைபெற்ற 16-வது மக்களவைத் தேர்தலில் 2.26% வாக்குகள் அதிகரித்து 76.84% வாக்குகள் என பதிவாகி இருந்தன.
First published: March 15, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...