விழுப்புரம் சிறுமி எரித்துக் கொலை: முதல்வர் பழனிசாமி கண்டனம் - கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி

“உயிரிழந்த ஜெயஸ்ரீயின் குடும்பத்திற்கு பொதுநிவாரண நிதியிலிருந்து 5 லட்சம் ரூபாய் வழங்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார்

விழுப்புரம் சிறுமி எரித்துக் கொலை: முதல்வர் பழனிசாமி கண்டனம் - கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி
முதலமைச்சர்
  • Share this:
விழுப்புரம் சிறுமி எரித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தனது கண்டனத்தைத் தெரிவித்துள்ளார். மேலும் இச்செயலில் ஈடுபட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் உறிதி அளித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது, விழுப்புரம் மாவட்டம் சிறுமதுரை கிராமத்தைச் சேர்ந்த ஜெயபால் என்பவரின் மகள் சிறுமி ஜெயஸ்ரீ என்பவர் 10.05.2020 அன்று முருகன் மற்றும் கலியபெருமாள் ஆகிய இருவரால் தீ வைத்ததில் பலத்த காயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் என்ற செய்தி அறிந்து நான் மிகுந்த துயரமும் வேதனையும் அடைந்தேன்.

இந்த துயர சம்பவத்தில் உயிரிழந்த சிறுமி ஜெயஸ்ரீயின் குடுபம்பத்திற்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.


இந்தக் குற்றவாளிகள் மீது திருவெண்ணெய்நல்லூர் காவல் நிலையத்தில் கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்படுகிறது.

இக்கொடூர செயலை நான் வன்மையாக கண்டிக்கிறேன். இச்செயலில் ஈடுபட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை சட்டப்படி எடுக்கப்படும். உயிரிழந்த ஜெயஸ்ரீயின் குடும்பத்திற்கு முதலமைச்சரின் பொதுநிவாரண நிதியிலிருந்து 5 லட்சம் ரூபாய் வழங்க நான் உத்தரவிட்டுள்ளேன்”

இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

 

First published: May 11, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading