• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • விழுப்புரத்தில் போலி ரெம்டெசிவிரால் உயிரிழந்த மருத்துவர்: தனியார் மருத்துவமனையின் அனுமதி ரத்து - விசாரணையில் சுகாதாரத்துறை

விழுப்புரத்தில் போலி ரெம்டெசிவிரால் உயிரிழந்த மருத்துவர்: தனியார் மருத்துவமனையின் அனுமதி ரத்து - விசாரணையில் சுகாதாரத்துறை

Youtube Video

விழுப்புரம் மாவட்டம் தி்ண்டிவனத்தில், போலி ரெம்டெசிவிர் மருந்தால் மருத்துவர் உயிரிழந்த விவகாரத்தில், தனியார் மருத்துவமனையின் கொரோனா சிகிச்சைக்கான அனுமதி ரத்து செய்யப்பட்டுள்ளது. 

  • Share this:
    விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் - மரக்காணம் செல்லும் சாலையில், ஐமெட் என்ற பிரபல தனியார் மருத்துவமனை உள்ளது.  அதே பகுதியில் மருத்துவமனை நடத்தி வரும் குழந்தை மருத்துவரான ராமன் என்பவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு, கொரோனா தொற்றால் ஐமெட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

    கொரோனா பாதிப்பு மருத்துவர் ராமனுக்கு அதிகளவில் இருந்த நிலையில், அவருக்கு ரெம்டெசிவிர் மருந்து கொடுக்கப்பட்டுள்ளது; எனினும் சிகிச்சை பலனின்றி மருத்துவர் உயிரிழந்தார்.

    மருத்துவர் ராமனுக்கு கொடுக்கப்பட்ட மருந்துகளை அவரது மனைவியும் மருத்துவருமான தீபா பரிசோதித்தபோது போலி ரெம்டெசிவிர் இருந்தது தெரியவந்தது. இதுகுறித்து தமிழக முதலமைச்சரின் தனிப்பிரிவுக்கு மருத்துவர் தீபா புகார் அனுப்பியிருந்தார்.

    இதையடுத்து மாநில பொதுசுகாதாரத் துறை இயக்குநர் செல்வவிநாயகம் தலைமையிலான அதிகாரிகள் குழு, செவ்வாய் அன்று ஐமெட் மருத்துவமனையில் ஆய்வு மேற்கொண்டனர்.

    அதில், கொரோனா விதிமுறைகளின்படி மருத்துவமனை நிர்வாகம் செயல்படாதது தெரியவந்ததால் ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதித்தனர்; மேலும் கொரோனா சிகிச்சை அளிக்கும் அனுமதியும் ரத்து செய்யப்பட்டுள்ளது.

    மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட எண்ணிக்கையை விட கூடுதல் எண்ணிக்கையில் ரெம்டெசிவிர் மருந்து குப்பிகள் கண்டுபிடிக்கப்பட்டதால், மருத்துவமனை நிர்வாகி மீது நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

    ஐமெட் மருத்துவமனைக்கு போலி ரெம்டெசிவிர் மருந்து எப்படி கிடைத்தது? அந்த மருத்துவமனையில் சிகிச்சை பெற்றவர்களில் எத்தனை பேர் இந்த போலி மருந்தால் உயிரிழந்தனர் என்பது குறித்து சுகாதாரத் துறை அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.


    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Karthick S
    First published: