Home /News /tamil-nadu /

வடிவேலு காமெடி பாணியில், பாரபட்சம் இல்லாமல் அனைத்து சின்னத்திலும் குத்து விட்ட வாக்காளர்!!

வடிவேலு காமெடி பாணியில், பாரபட்சம் இல்லாமல் அனைத்து சின்னத்திலும் குத்து விட்ட வாக்காளர்!!

 பாரபட்சம் இல்லாமல் அனைத்து சின்னத்திலும் குத்து விட்ட வாக்காளர்!!

பாரபட்சம் இல்லாமல் அனைத்து சின்னத்திலும் குத்து விட்ட வாக்காளர்!!

விழுப்புரம் மாவட்டம் கானை ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் பதவிக்கு பதிவான வாக்குகள் என்னப்பட்ட போது, அதில் அனைத்து சின்னத்திற்கு வாக்குப் பதிவு செய்த வினோத சம்பவம் நிகழ்ந்துள்ளது.

    விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள 13 ஊராட்சி ஒன்றியத்திற்கான தேர்தல் கடந்த 6 மற்றும் 9 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக நடைபெற்றது. இந்நிலையில், 13 இடங்களில் இன்று வாக்கு எண்ணிக்கை நடக்கும் பணிகள் நடந்து வருகின்றன. அதில், விழுப்புரம் அறிஞர் அண்ணா அரசு கலைக்கல்லூரியில், கானை ஒன்றியத்திற்கு உட்பட்ட வாக்குகள் என்னப்பட்டது.

    அப்போது, வெள்ளையாம்பட்டு ஊராட்சியில் 16வது வார்டில், பதிவான வாக்கு எண்ணிக்கையில் போது, மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் பதவிக்கு வாக்களித்த நபர் ஒருவர் வாக்குச்சீட்டில் இருந்த ஐந்து சின்னங்களில் 4 சின்னங்களுக்கு ஓட்டு போட்டுள்ளார். இந்த வாக்குச்சீட்டு முகவர்களால் கைப்பற்றப்பட்டு, பின்னர் அது செல்லாத வாக்காக அறிவிக்கப்பட்டது.

    ஒவ்வொரு சுற்று வாக்கு எண்ணிக்கையின் போதும், 2 அல்லது 3 வாக்காளர்கள் இதுபோல ஒரே வாக்குச்சீட்டில் 4, 5 பேருக்கு வாக்குகள் பதிவு செய்துள்ளனர். மேலும், சிலர் தங்களுக்கு விருப்பமான வேட்பாளர்களுக்கு வாக்களித்துவிட்டு, வாக்குச்சீட்டில் இருந்து அந்த சின்னத்தை மட்டும் கிழித்து வாக்கு பெட்டிக்குள் போட்டுச் சென்றுள்ளனர். இதுபோன்ற வாக்குகளும் செல்லாத வாக்காக அறிவிக்கப்பட்டுள்ளது.

    ’தென்னை மரத்தில் ஒரு குத்து.. ஏணியில் ஒரு குத்து’ என்ற வடிவேலு பட காமெடியை நினைவூட்டுவது போல, நடந்த இந்த சம்பவம் அங்கிருந்த அனைவருக்கும் சிரிப்பை வழவழைத்தது.

     
    Published by:Esakki Raja
    First published:

    Tags: Local Body Election 2021, News On Instagram, Vadivelu

    அடுத்த செய்தி