Home /News /tamil-nadu /

கூத்தாண்டவர் கோவிலில் திருநங்கைகள் தாலிகட்டிக் கொள்வது ஏன்? வரலாற்றுப் பின்னணி என்ன?

கூத்தாண்டவர் கோவிலில் திருநங்கைகள் தாலிகட்டிக் கொள்வது ஏன்? வரலாற்றுப் பின்னணி என்ன?

கூவாகம்

கூவாகம்

விழுப்புரம் மாவட்டம் கூவாகத்தில் நடைபெறும் திருநங்கைகள் பங்கேற்கும் நிகழ்வு இந்திய அளவில் கவனம் ஈர்க்கும் ஒன்றாக உள்ளது.

    விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் கூவாகம் என்ற பகுதியில் இருக்கும் இந்த கூத்தாண்டவர் கோவில் திருநங்கைகளுக்கு மிகவும் சிறப்பு வாய்ந்தது. இந்தக் கோவிலில் இருக்கும் மூலவர் அரவான். இங்கு சித்திரை மாதம் நடக்கும் திருவிழாவில், சித்திரா பௌர்ணமி நாளானது மிகவும் விசேஷமாக கொண்டாடப்படுகிறது.

    மனதில் அரவானை நினைத்துக்கொண்டு திருநங்கைகள் தாலி கட்டிக்கொள்ளும் சடங்கு இந்த கோவிலில் மிகவும் விசேஷம். இந்த சடங்கில் கலந்து கொள்வதற்காக நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் திருநங்கைகள் வருவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

    கூத்தாண்டவர் கோயிலில் திருநங்கைகள் தாலி கட்டிக்கொள்ளும் சடங்குக்கு காரணமாக மகாபாரதப் போரின் பின்னணியில் புராணக் கதைகள் கூறப்படுகிறது.

    மகாபாரத் போரில் பாண்டவர்கள் வெற்றி பெறுவதற்காக அர்ஜூனனின் மகன் அரவான் பலிகொடுக்கப்பட வேண்டிய சூழல் ஏற்படுகிறது. பலியிடப்படுவதற்கு முன்னர் அரவானின் இறுதி ஆசையான பெண்ணை மணந்து இல்லறவாழ்க்கையில் இணைவதற்காக கிருஷ்ணன், பெண் வேடம் ஏற்றுவருகிறார். இந்தப் பின்னணியில்தான் திருநங்கைகள் இங்கு வந்து தாலி கட்டிக்கொள்கின்றனர் என்று கூறப்படுகிறது.

    கடந்த ஐந்தாம் தேதி சாகை வார்த்தல் நிகழ்ச்சியோடு திருவிழா தொடங்கிய நிலையில் திருவிழாவின் முக்கிய நிகழ்வுகளாக 19ஆம் தேதி திருநங்கைகள் தாலிகட்டும் நிகழ்வும் அதனை தொடர்ந்து 20ஆம் தேதி காலை தேர் திருவிழாவும் தொடர்ந்து திருநங்கைகள் தாலி அறுத்து வெள்ளை சேலை உடுத்தும் நிகழ்வும் நடைபெறவுள்ளது. இதற்காக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், பல்வேறு மாநிலங்களில் இருந்தும் ஏராளமான திருநங்கைகள் விழுப்புரத்தில் குவியத் தொடங்கியுள்ளனர்.

    இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு கூத்தாண்டவர் கோயில் திருவிழா- ஆயிரக்கணக்கில் கூடிய திருநங்கைகள்

    இதனால் விழுப்புரம் நகரமே கலைகட்டியுள்ளது. நாளை மற்றும் நாளை மறுநாள் ஆகிய இரண்டு நாட்களும் திருநங்கைகளுக்கன அழகி போட்டி மற்றும் நடன போட்டிகள், கலை நிகழ்ச்சியிகள் நடைபெறவுள்ளது.

    அதற்காக நாடு முழுவதிலுமிருந்து வந்த திருநங்கைகள் அரவான் கோயிலுக்கு முன்பு தாலி கட்டிக்கொள்வர். அதன் தொடர்ச்சியாக இன்று தாலி அறுத்து வெள்ளைச் சேலை உடுத்திக் கொள்வார்கள். அதைத் தவிர்த்து அழகிப் போட்டிகள் உள்ளிட்ட மற்றப் போட்டிகளும் நடைபெறும்.
    Published by:Karthick S
    First published:

    அடுத்த செய்தி