Home /News /tamil-nadu /

இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு கூத்தாண்டவர் கோயில் திருவிழா- ஆயிரக்கணக்கில் கூடிய திருநங்கைகள்

இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு கூத்தாண்டவர் கோயில் திருவிழா- ஆயிரக்கணக்கில் கூடிய திருநங்கைகள்

திருநங்கைகள்

திருநங்கைகள்

இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு நடக்கும் நிகழ்வு என்பதால் இவற்றை திருநங்கைகள் ஆவலோடு எதிர்நோக்கியுள்ளனர்.

    விழுப்புரத்தில் இரண்டு ஆண்டுக்கு பிறகு நடக்கும் கூத்தாண்டவர் கோயில் திருவிழாவில் பங்கேற்க ஏராளமான திருநங்கைகள் குவிந்துள்ளனர். 

    திருநங்கைகளின் முக்கிய நிகழ்வாக இருப்பது கூவாகம் கூத்தாண்டவர் கோயில் திருழா. கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா காரணமாக நடைபெறாமல் இருந்த கூத்தாண்டவர் கோயில் திருவிழா இந்த ஆண்டு நடைபெறவுள்ளது. கடந்த ஐந்தாம் தேதி சாகை வார்த்தல் நிகழ்ச்சியோடு திருவிழா தொடங்கிய நிலையில் திருவிழாவின் முக்கிய நிகழ்வுகளாக வருகின்ற 19ஆம் தேதி திருநங்கைகள் தாலிகட்டும் நிகழ்வும் அதனை தொடர்ந்து 20ஆம் தேதி காலை தேர் திருவிழாவும் தொடர்ந்து திருநங்கைகள் தாலி அறுத்து வெள்ளை சேலை உடுத்தும் நிகழ்வும் நடைபெறவுள்ளது.

    இதற்காக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், பல்வேறு மாநிலங்களில் இருந்தும் ஏராளமான திருநங்கைகள் விழுப்புரத்தில் குவிந்துள்ளனர். இதனால் விழுப்புரம் நகரமே கலை கட்டியுள்ளது. நாளை மற்றும் நாளை மறுநாள் ஆகிய இரண்டு நாட்களும் திருநங்கைகளுக்கன அழகி போட்டி மற்றும் நடன போட்டிகள், கலை நிகழ்ச்சியிகள் நடைபெறவுள்ளது. இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு நடக்கும் நிகழ்வு என்பதால் இவற்றை திருநங்கைகள் ஆவலோடு எதிர்நோக்கியுள்ளனர்.

    இதுகுறித்து திருநங்கைகள் கூறுகையில் கடந்த இரண்டு ஆண்டுகளாக கூத்தாண்டவர் கோயில் திருவிழா நடைபெறாமல் இருந்தது. இந்த ஆண்டு மீண்டும் திருவிழாவுக்காக விழுப்புரம் வந்துள்ளோம். இந்த ஆண்டு ஏறாலமான திருநங்கைகள் வருகை புரிந்துள்ளனர். இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு எங்கள் தோழிகளை பார்ப்பது மிந்த மகிழ்ச்சியை தறுவதாக தெரிவித்துள்ளனர்.
    Published by:Ramprasath H
    First published:

    Tags: Tamil News, Tamilnadu, Transgender, Villupuram

    அடுத்த செய்தி