Home /News /tamil-nadu /

அண்ணன்.. 77வயது முதியவர்.. ப்ளஸ் 1 மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் அதிர்ச்சி தகவல்

அண்ணன்.. 77வயது முதியவர்.. ப்ளஸ் 1 மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் அதிர்ச்சி தகவல்

விழுப்புரம் பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதானவர்கள்

விழுப்புரம் பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதானவர்கள்

பள்ளி சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக மேலும் பலர் கைது செய்யப்படுவர் என போலீஸ் வட்டாரத்தில் தகவல்

    விழுப்புரத்தில் பள்ளி மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த அண்ணன் உட்பட 3 பேர் போக்சோ சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர்.

    விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அடுத்த ஈச்சங்குப்பம் கிராமத்தை சேர்ந்த 11-ஆம் வகுப்பு மாணவியின் தாய் - தந்தை இறந்து விட்டதால் அவருடைய பெரியம்மா ஆதரவில் வளர்க்கப்பட்டார்.  இவர் பத்தாம் வகுப்பு வரை விடுதியில் தங்கி பள்ளிப்படிப்பை முடித்துள்ளார். கடந்த 6 மாதத்துக்கு முன்பு ஈச்சங்குப்பம் கிராமத்துக்கு வந்த சிறுமி பெரியம்மாவின் வீட்டில் தங்கி 11-ம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில் சிறுமிக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டதையடுத்து சிறுமியின் பெரியம்மா மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளார். அங்கு சிறுமியை பரிசோதித்த மருத்துவர்கள் 4 மாதம் கர்ப்பமாக இருப்பதாக கூறி அதிர்ச்சியளித்துள்ளார்.

    Also Read:  500 ரூபாய் ஃபைன் இங்க கட்டுனா 300தான் - ஊரடங்கில் வசூல் வேட்டை நடத்திய போலி போலீஸ்

    சிறுமியின் பெரியம்மாசெஞ்சி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் இதுகுறித்து புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த செஞ்சி அனைத்து மகளிர் காவல்துறையினர் சிறுமியிடம் விசாரணை மேற்கொண்டனர். அப்போது அதிர்ச்சிகரமான தகவலை சிறுமி கூறியுள்ளார். பள்ளி மாணவியின் பெரியம்மா மகன் மோகன்(வயது 32), அதே கிராமத்தை சேர்ந்த முதியவர்  மண்ணாங்கட்டி(எ)வெங்கடேசன் ( வயது 77) மற்றும் இளையராஜா ( வயது28) ஆகிய 3 பேர் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்தது தெரியவந்தது. இதனையடுத்து மூவரையும்  போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.

    சிறுமிக்கு 10-க்கும் மேற்பட்டோர் பாலியல் தொல்லை கொடுத்தாக  வெளியான தகவலையடுத்து விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீநாதா செஞ்சி காவல்நிலையத்தில் 2 மணி நேரத்துக்கு மேலாக தீவிர விசாரணை மேற்கொண்டார். அதனைத் தொடர்ந்து பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்ற தடுப்பு கூடுதல் காவல் கண்காணிப்பாளர் தேவராஜ் செஞ்சி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் நள்ளிரவில் தீவிர விசாரணை மேற்கொண்டார்.

    Also Read: நான் உதயநிதியின் பி.ஏ.. என்று கூறி இளம்பெண்ணிடம் லட்சங்களை சுருட்டிய மோசடி பேர்வழி கைது

    காவல் உயரதிகாரிகள் செஞ்சி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் அடுத்தடுத்த விசாரணை மேற்கொண்டதால் செஞ்சி அனைத்து மகளிர் காவல் நிலையம் பரபரப்புடன் காணப்பட்டது. இந்நிலையில் பள்ளி சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக மேலும் பலர் கைது செய்யப்படுவர் என போலீசார் வட்டாரத்தில் தகவல் வெளியாகியுள்ளதால் செஞ்சி பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

    செய்தியாளர்: ஆ.குணாநிதி (விழுப்புரம்)
    Published by:Ramprasath H
    First published:

    Tags: Crime | குற்றச் செய்திகள், IG sexual harrasement case, POCSO case, Police, Sexual abuse

    அடுத்த செய்தி