Home /News /tamil-nadu /

தனியார் பேருந்து மோதியதில் ஆட்டோ ஓட்டுநர் பலி.. பேருந்துக்கு தீ வைத்த பொதுமக்கள்

தனியார் பேருந்து மோதியதில் ஆட்டோ ஓட்டுநர் பலி.. பேருந்துக்கு தீ வைத்த பொதுமக்கள்

விழுப்புரம் சாலை விபத்து

விழுப்புரம் சாலை விபத்து

விழுப்புரத்தில் ஆட்டோ மீது தனியார் பேருந்து மோதிய விபத்தில் ஆட்டோ ஓட்டுநர் பலி: விபத்து ஏற்படுத்திய தனியார் பேருந்தை அடித்து நொறுக்கி தீ வைக்கப்பட்டதால் பதற்றம் ஏற்பட்டது. 

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
    விழுப்புரம் அருகே உள்ள பானாம்பட்டு, உறல்கரைமேடு பகுதியைச் சேர்ந்தவர் ஆட்டோ ஓட்டுநர் அர்ஜூனன். இவர் வழக்கம் போல் சவாரியை முடித்து விட்டு நேற்று இரவு தனது ஆட்டோவில் பானாம்பட்டு நோக்கி சென்று கொண்டிருந்தார். அப்போது விழுப்புரத்தில் இருந்து புதுச்சேரி சாலையில் சென்று கொண்டிருந்த இவரின் ஆட்டோ மீது புதுச்சேரியில் இருந்து விழுப்புரம் நோக்கி அதிவேகத்தில் வந்த தனியார் பேருந்து பயங்கரமாக மோதி விபத்துக்குள்ளானது.

    Also Read: சீட்டு பணம் ரூ.5 லட்சத்தை சுருட்டியதாக பெண் காவலர் மீது புகார்.. நடவடிக்கை எடுக்காததால் பொதுமக்கள் வேதனை

    இதில் ஆட்டோ ஓட்டுநர் அர்ஜூனன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி பொதுமக்கள், விபத்தில் பலியான ஆட்டோ ஓட்டுநர் அர்ஜூனனின் உறவினர்கள் என 200க்கும் மேற்பட்டோர் திரண்டு சென்று விழுப்புரம்-புதுச்சேரி தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது திடீரென சிலர் அதிவேகத்தில் வந்து விபத்தை ஏற்படுத்திய தனியார் பேருந்தை சரமாரியாக அடித்து நொறுக்கினர்.

    தொடர்ந்து பேருந்தின் பின்புறத்தில் தீ வைத்தனர். இதனால் தனியார் பேருந்து கொளுந்துவிட்டு எரியத் தொடங்கியது. இதுகுறித்து தகவலறிந்ததும் ஏராளமான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பேருந்தில் பற்றி எரிந்து கொண்டிருந்த தீயை அணைத்தனர். தொடர்ந்து பேருந்து ஓட்டுனரை கைது செய்ய வலியுறுத்தி உடலை எடுக்கவிடாமல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது பொது மக்கள் காவல்துறையினருடன் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டனர் இதனால் காவல்துறையினர் அதிக அளவில் குவிக்கப்பட்டனர்.

    Also Read: ஐய்யப்ப பக்தர்களின் வசதிக்காக தமிழகத்தில் இருந்து கேரளாவிற்கு 64 சிறப்பு பேருந்துகள் இயக்கம்!

    இதனைத்தொடர்ந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தியதைத் தொடர்ந்து சாலை மறியலைக் கைவிட்டு பொதுமக்கள் கலைந்து சென்றனர். இச்சம்பவத்தால் விழுப்புரம் - புதுச்சேரி தேசிய நெடுஞ்சாலையில் சுமார் 2 மணி நேரம் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. தொடர்ந்து பதற்றம் நிலவி வருவதால் அப்பகுதியில் ஏராளமான போலீசார் பாதுகாப்பிற்காக குவிக்கப்பட்டுள்ளனர்.

    செய்தியாளர்:  ஆ.குணாநிதி  (விழுப்புரம்)               
    Published by:Ramprasath H
    First published:

    Tags: Crime | குற்றச் செய்திகள், Villupuram

    அடுத்த செய்தி