விழுப்புரம் அருகே மதுபோதையில் தந்தையே தனது நண்பருடன் இணைந்து மகளை 8 மாத கர்ப்பமாக்கிய கொடூரம் இருவரையும் போக்சோ சட்டத்தின் கீழ் விழுப்புரம் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் கைது செய்து சிறையிலடைத்தனர்.
விக்கிரவாண்டியை அடுத்த வி.சாத்தனூர் கிராமத்தை சேர்ந்த 17 வயது சிறுமிக்கு திடீர் என உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. உறவினர்கள் சிறுமியை சிகிச்சைக்காக விழுப்புரம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர் அங்கு சிறுமியை பரிசோதனை செய்த மருத்துவர்கள் சிறுமி 8 மாத கற்பாக இருப்பதாக தெரிவித்தனர். சிறுமியிடம் கணவர் குறித்த விவரங்களை மருத்துவமனை ஊழியர்கள் கேட்டபோது தனக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை என கூறியுள்ளார்.
இதனைக்கேட்டு அதிரச்சியடைந்த மருத்துவர்கள் விழுப்புரம் மகளிர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அந்த தகவலின் பேரில் விரைந்து சென்ற போலீசார் சிறுமியிடம் விசாரனை செய்தபோது. தாய் மரணமடைந்து விட்டதால் தந்தையான கோவிந்தனுடன் 10 ம் வகுப்பு படித்து முடித்துவிட்டு வசித்து வருவதாகவும், கட்டிட கூலி தொழிலாளியான தனது தந்தைக்கு குடி பழக்கம் இருப்பதாகவும் இதனால் அடிக்கடி குடித்துவிட்டு வீட்டிற்கு வரும் அவர் தன்னை பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்து வந்தார்.
மேலும் கடந்த ஆண்டு தனது தந்தை குடிபோதையில் அவரது நண்பரான முனுசாமி என்பவருடன் சேர்ந்து என்னை பாலியல் பலாத்காரம் செய்துவிட்டதாகவும், அதன் காரணமாகவே தான் கர்ப்பமடைந்துள்ளதாகவும் இதனை வெளியே சொல்லக்கூடாது என மிரட்டி வந்ததாக காவல்துறையினரிடம் தெரிவித்துள்ளார்.
பாதிக்கப்பட்ட சிறுமி அளித்த புகாரின் பேரில் அவரது தந்தை கோவிந்தன் (வயது 44) மற்றும் அவரது நண்பர் முனுசாமி ஆகிய இரண்டு பேரை போக்சோ சட்டத்தில் கைது செய்த விழுப்புரம் அனைத்து மகளிர் போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி சிறையில் அடைத்தனர். தந்தையே தனது நண்பருடன் சேர்ந்து மகளை பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. செய்தியாளர் : ஆ.குணாநிதி (விழுப்புரம்)
Published by:Ramprasath H
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.