ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

நகைக்கடன் தள்ளுபடி கேட்கப்போன விவசாயிக்கு காத்திருந்த அதிர்ச்சி

நகைக்கடன் தள்ளுபடி கேட்கப்போன விவசாயிக்கு காத்திருந்த அதிர்ச்சி

பாதிக்கப்பட்ட விவசாயி

பாதிக்கப்பட்ட விவசாயி

விவசாயி பெயரில் போலியாக நகைகடன் பெற்றதாக கூறுவதில் தான் எந்த வித கையெழுத்தும் இடவில்லை என கூட்டுறவு வங்கி தலைவர் தெரிவித்துள்ளார்.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :

  விழுப்புரத்தில் கூட்டுறவு வங்கியில் நகைகடன் தள்ளுபடி ஆகவில்லை எனக் கேட்ட விவசாயி பெயரில் கூடுதலாக 45 கிராம் நகை வைத்து கடன்பெற்றுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்ததால் விவசாயி அதிர்ச்சி.

  விழுப்புரம் மாவட்டம் கண்டாச்சிபுரம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் மேல்வாலை கிராமத்தை சார்ந்த கலியபெருமாள் என்ற விவசாயி கடந்த 2021 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் நெற் பயிர் கடனாக கூட்டுறவு வங்கியில் ஒன்பதரை கிராம் தங்க நகையை அடகு வைத்து பயிர் கடன் பெற்றுள்ளார். அதன் பின் தமிழக முதலமைச்சராக ஸ்டாலின் பொறுப்பேற்ற பிறகு விவசாயிகள் கூட்டுறவு வங்கியில் 5 சவரனுக்கு கீழ் பயிர் கடன் பெற்றிருந்தால் பயிர் கடன் முழுமையாக தள்ளுபடி செய்யப்பட்டும் என அறிவித்தார்.

  Also Read: கீழடியில் திறந்தவெளி அருங்காட்சியகம் - நிலம் கொடுக்க மறுக்கும் விவசாயிகள்

  இதனையடுத்து கலியபெருமாள்  கூட்டுறவு வங்கியில் ஒன்பதரை கிராம் நகை தள்ளுபடி செய்யப்பட்டுள்ளதா என கேட்டபோது உன் பெயரில் 55 கிராம் தங்க நகை கண்டாச்சிபுரத்திலுள்ள  கூட்டுறவு வங்கியில் வைத்து கடன் பெற்றுள்ளதாகவும், அதனால் நகை கடன் தள்ளுபடி ஆகவில்லை என தெரிவித்துள்ளனர். இதனால் பாதிக்கபட்ட விவசாயி வங்கி அதிகாரிகளிடம் நான் கடன் பெற்றதோ ஒன்பதரை கிராம் நகை தான் ஆனால் 55 கிராம் நகை வைத்து பெற்றுள்ளதாக கூறுகிறீர்கள் என முறையிட்டுள்ளனர்.

  அதற்கு அதிகாரிகள் இரு வேறு கூட்டுறவு வங்கியில் 55 கிராம் நகை இருப்பதாக கூறி நகை கடனை தள்ளுபடி செய்ய மறுத்துவிட்டனர். இதனால் பாதிக்கப்பட்ட விவசாயி தன் பெயரில் போலியாக கூட்டுறவு வங்கி செயலாளர் சுப்பிரமணி மற்றும் கூட்டுறவு வங்கி தலைவர் தனபால் மோசடியில் ஈடுபட்டதாக கண்டாச்சிபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரினை பெற்ற போலீசார் இது தொடர்பாக வங்கி அதிகாரிகளிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

  Also Read: கொரோனாவால் கல்லூரிகளுக்கு விடுமுறை: சொந்த ஊர்களுக்கு படையெடுக்கும் மாணவ- மாணவிகள்- சென்னையில் அலைமோதிய கூட்டம்

  மேலும்  விவசாயி அளித்த குற்றச்சாட்டுக்கு தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி தலைவர் தனபால் மறுப்பு தெரிவித்துள்ளார். விவசாயி பெயரில் போலியாக நகைகடன் பெற்றதாக கூறுவதில் தான் எந்த வித கையெழுத்தும் இடவில்லை எனவும் அப்படி முறைகேடு நடந்திருந்தால் கண்டிப்பாக துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்துள்ளார்.

  செய்தியாளர் : ஆ.குணாநிதி (விழுப்புரம்)   

  Published by:Ramprasath H
  First published:

  Tags: Bank Loan, Cooperative bank, Gold loan, Jewels, Money, Villupuram