விழுப்புரம்: தேசிய மெரிட் தேர்வில் வெற்றிபெற்றதால் உதவித் தொகை வழங்கிய கல்வி அலுவலர்!

  • Share this:
    கல்வி உதவித் தொகை பெறுவதற்காக நடத்தப்பட்ட தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு, சான்றிதழ்களை செஞ்சி மாவட்ட  கல்வி அலுவலர் அமுதா வழங்கினார்.

    தேசிய வருவாய் வழி மற்றும் திறன்  உதவித் திட்டத்தில் (National Income and Skills Study Assistance Program) உதவித்தொகை பெறுவதற்கு 8-ம் வகுப்பு முடித்த மாணவர்களுக்கு என்.எம்.எம்.எஸ் எனப்படும் (National Means Cum-Merit Scholarship) தேசிய மெரிட் தேர்வு கடந்த பிப்ரவரி மாதம் நடைபெற்றது. இதில்,  தேர்வு செய்யப்படும் மாணவர்களுக்கு 9 ஆம் வகுப்பிலிருந்து 12 ஆம் வகுப்பு வரை மாதம் ரூபாய் 1,000  என 48 மாதங்களுக்கு 48,000 ரூபாய் அவர்களது வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும்.

    8 ஆம் வகுப்பு முடித்த செஞ்சி மாவட்டத்தைச் சேர்ந்த 1768 மாணவர்கள் தேசிய மெரிட் தேர்வு  எழுதியதில்   71 மாணவ மாணவிகள்  தேர்வு செய்யப்பட்டனர். அப்படி, தேர்வு செய்யப்பட்டவர்கள் செஞ்சி வட்டம் கொட்டபூண்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் 10 மாணவர்களும் அனந்தபுரம் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 8 மாணவிகளும்  என அதிகப்படியாக தேர்வு பெற்றவர்கள் ஆவர்.  தேர்வு பெற்ற மாணவர்களை செஞ்சி மாவட்ட கல்வி அலுவலர் அமுதா  பாராட்டி  அதற்கான  சான்றிதழ்களை வழங்கினார் .

    அப்போது,  மாவட்ட பள்ளிகல்வித்துறை துணை ஆய்வாளர் விநாயகமூர்த்தி,  வட்டார கல்வி அலுவலர்கள் ஆக்சிலியம் ஃபெலிக்ஸ், கோவிந்தராஜன் மற்றும் தலைமை ஆசிரியர்கள்  இதர ஆசிரியர்கள் உடனிருந்தனர்.

    இதில், ஊராட்சி ஒன்றிய பெண்கள் நடுநிலைப் பள்ளியில் ஒன்பதாம்  வகுப்பு படிக்கும் அனந்தபுரம் ஸ்வேதா,  கடம்பூர் பஞ்சாயத்து யூனியன் மிடில் பள்ளியில் ஒன்பதாம்  வகுப்பு படிக்கும்  அபிதா,  செஞ்சி அரசு பெண்கள் மேல் நிலை பள்ளியில் ஒன்பதாம்   வகுப்பு படிக்கும்  பரமேஸ்வரி ஆகியோர் அதிக மதிப்பெண்கள் பெற்று   விழுப்புரம் மாவட்டத்தில் முதலிடம் பெற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    செய்தியாளர் : சு. பூஜா - விழுப்புரம்

    Published by:Murugesh M
    First published: