விழுப்புரம் ரயில் நிலையம் அருகே மாற்றுதிறனாளி வைத்திருந்த 8500 ரூபாயை வடமாநில இளைஞர்கள் ஒருவர் பறிக்க முயன்றபோது ஆட்டோ ஓட்டுனர்கள் மீட்டு பணத்தை மாற்று திறனாளியிடம் ஒப்படைத்த சம்பவம் அனைவரிடத்திலும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
விழுப்புரம் ரயில் நிலையம் அருகிலுள்ள உழவர் சந்தை பகுதியில் அம்மையப்பன் ஆட்டோ ஓட்டுனர் சங்கத்தின் ஸ்டேண்டு செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் நேற்று ஆட்டோ நிறுத்தம் பகுதியில் அழுக்கு சட்டையுடன் இருந்த மாற்று திறனாளி பையில் வைத்திருந்த 8,500 ரூபாயை வடமாநிலத்தை சார்ந்த இளைஞர் ஒருவர் பறித்து செல்ல முற்பட்டுள்ளார். இதனையடுத்து ஆட்டோ நிறுத்தத்திற்கு ஆட்டோவை நிறுத்த பிரகாஷ், மகேந்திரன், சுரேஷ், ராஜசேகர் ஆகிய நான்கு ஓட்டுனர்களும் வந்துள்ளனர்.
அப்போது மாற்றுதிறனாளியிடம் பணத்தை பிடுங்குவதை கண்ட ஆட்டோ ஓட்டுனர்கள் வடமாநில இளைஞரை பிடித்து அவனிடமிருந்து 8,500 ரூபாயை மீட்டு மாற்று திறனாளியிடம் கொடுத்துவிட்டு பணத்தை பறிக்க முயன்ற வடமாநில இளைஞரை ரயில்வே காவல்துறையினரிடம் ஒப்படைத்துள்ளனர். அதன் பின் ரயில்வே போலீசார் விசாரனை செய்தபோது பணத்தை பறிக்க முயன்ற வடமாநில இளைஞர் போலீசாரை ஏமாற்றிவிடு தப்பித்து சென்றுள்ளார்.
இதனையடுத்து ரயில்வே போலீசார் மாற்றுதிறனாளியிடம் பணத்தை ஒப்படைத்து ரயிலில் அனுப்பி வைத்துள்ளனர். மாற்று திறனாளியிடம் பணத்தை வடமாநில இளைஞர் பறித்து செல்ல முயன்ற போது ஆட்டோ ஓட்டுனர்கள் மீட்டு மாற்றுதிறனாளியிடம் ஒப்படைக்கும் போது வீடியோவாக பதிவிட்டுள்ளனர். அந்த வீடியோ பதிவானது சமூக வலைதளங்களில் பரவியதை தொடர்ந்து ஆட்டோ ஓட்டுனர்களுக்கு பொதுமக்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
செய்தியாளர் : ஆ.குணாநிதி (விழுப்புரம்)
Published by:Ramprasath H
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.