விழுப்புரம் அருகேயுள்ள நன்னட்டாம்பாளையத்தில் ஒன்றாம் வகுப்பு முதல் 5 ஆம் வகுப்பு வரையிலான அரசு ஆரம்ப பள்ளி செயல்பட்டு வருகிறது. ஆரம்ப பள்ளியில் ஆசிரியராக வளவனூரை சார்ந்த பாபு என்பவர் பணியாற்றி வருகிறார்.
இப்பள்ளியில் நூறுக்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பயின்று வருகின்ற நிலையில், ஆசிரியர் பாபு பள்ளி சிறுமிகளிடம் பாலியல் சில்மிஷத்தில் அடிக்கடி ஈடுபட்டு வந்ததாக சொல்லப்படுகிறது. இந்நிலையில் அவர் நான்காம் வகுப்பு மாணவியிடம் பாலியல் சில்மிஷத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.
இதனால் பாதிக்கப்பட்ட மாணவி, பெற்றோர்களிடத்தில் தெரிவித்துள்ளார். இதையடுத்து, பெற்றோர் கிராம மக்களை அழைத்து சென்று பள்ளி ஆசிரியருக்கு தர்ம அடி கொடுத்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து வளவனூர் காவல் நிலையத்திற்கு ஊர்மக்கள் தகவல் தெரிவித்தனர். அதனைத் தொடர்ந்து போலீசார் விரைந்து வந்து ஆசிரியரை பாதுகாப்பாக அழைத்து சென்றனர்.
பள்ளி ஆசிரியரின் ஒழுங்கீன செயல் குறித்து முதன்மை கல்வி அலுவலர் கிருஷ்ணபிரியாவுக்கு தகவல் தெரிவித்ததின் பேரில் சம்பவ இடத்தில் கல்வி துறை அதிகாரிகள் விசாரணை செய்து ஆசிரியரை பணியிடை மாற்றம் செய்ய உத்தரவு பிறப்பித்தனர்.
Must Read : நடந்து சென்ற பெண்களிடம் சில்மிஷத்தில் ஈடுபட்ட மதுப்பிரியர்... தர்மஅடி கொடுத்த பொதுமக்கள்
ஆசிரியரே பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் அப்பகுதியினரிடையே பரபரப்பை ஏற்படுத்தியது.
செய்தியாளர் - ஆ.குணாநிதி, விழுப்புரம். இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.