ஒரு ஓட்டு கூட கிடைக்காத பாஜக வேட்பாளரின் பரிதாபம்..
ஒரு ஓட்டு கூட கிடைக்காத பாஜக வேட்பாளரின் பரிதாபம்..
பாஜக வேட்பாளர் நிரோஷா
BJP - Single Vote: அனந்தபுரம் பேரூராட்சியில் பாஜக வேட்பாளர் ஒரு வாக்குகூட வாங்காத நிலையில் இதனை மீம்ஸ்கள் மூலம் சமூக வளைதளங்களில் கேலி செய்து வருகின்றனர்.
விழுப்புரம் மாவட்டம் அனந்தபுரம் பேரூராட்சியில் போட்டியிட்ட பாஜக பெண் வேட்பாளருக்கு ஒரு ஒட்டுக்கூட விழாதது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
விழுப்புரம் மாவட்டத்திலுள்ள மூன்று நகராட்சிகள், ஏழு பேரூராட்சிகளுக்கான தேர்தல் கடந்த 19ஆம் தேதி நடைபெற்றது நேற்று பதிவான வாக்குகள் 10 வாக்கு என்னும் மையத்தில் நடைபெற்றது. அனந்தபுரம் பேரூராட்சிக்கு உட்பட்ட வார்டுகளில் பதிவான வாக்குகள் செஞ்சியில் உள்ள ராஜாதேசிங்கு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது. இதில் அனந்தபுரம் பேரூராட்சிக்கு உட்பட்ட 6வது வார்டில் திமுக வேட்பாளர் அக்ஷயா வெற்றி பெற்ற நிலையில் அவரை எதிர்த்து போட்டியிட்ட பாரதிய ஜனதா வேட்பாளர் நிரோஷா ஒரு வாக்குகளைக்கூட பெறவில்லை.
அதே வார்டில் சுயேட்சையாக போட்டியிட்ட மஞ்சுளா 7 வாக்குகளும், ஜீவிதா 11 வாக்குகளும் பெற்றிருந்த நிலையில் பாஜக சார்பில் போட்டியிட்டு ஒரு வாக்கினைக்கூட நிரோஷா பெறவில்லை. வேட்பாளர் நிரோஷா தாமரை சின்னத்தில் வாக்களித்திருந்தால் கூட ஒரு வாக்கு பதிவாகியிருக்க வேண்டும் என்ற நிலையில் ஒரு வாக்கு கூட பதிவாகாதது அனைவருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.
தற்போது பாஜக வேட்பாரகாக போட்டியிட்ட நிரோஷா யாருக்கு வாக்களித்தார் என்ற கேள்வி எழுந்துள்ளது.
செய்தியாளர்: ஆ.குணாநிதி (விழுப்புரம்)
Published by:Ramprasath H
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.